வ‌யி‌ற்று‌ப் புழு நீ‌ங்க நார்த்தங்காய் சாதம் செய்வது எப்படி?





வ‌யி‌ற்று‌ப் புழு நீ‌ங்க நார்த்தங்காய் சாதம் செய்வது எப்படி?

0

எலுமிச்சை போன்று புளிப்பாகவும், ஆனால் பெரியதாக இருப்பது தான் நார்த்தங்காய். பொதுவாக இதனைக் கொண்டு ஊறுகாய் தான் செய்வார்கள். 

நார்த்தங்காய் சாதம்

ஆனால் இதனைக் கொண்டு கலவை சாதம் செய்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். அதிலும் இது புளிப்பாக மட்டுமின்றி லேசாக கசப்பாகவும் இருக்கும். 

மலம் கழிக்காமல் அடக்கியதால் இறந்த ஐரோப்பிய பெண் !

இருப்பினும் இதன் சுவை அனைவருக்குமே பிடிக்கும். இங்கு அந்த நார்த்தங்காய் சாதத்தை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். பேச்சுலர்கள் கூட இந்த கலவை சாதத்தை முயற்சிக்கலாம்.

தேவையான பொருட்கள்

சாதம் - 3 கப்

நார்த்தங்காய் - 1 (பெரியது மற்றும் சாறு எடுத்துக் கொள்ளவும்)

தாளிப்பதற்கு...

பச்சை பயறு கடையல்பச்சை பயறு கடையல்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

வரமிளகாய் - 4

கறிவேப்பிலை - சிறிது

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

நம்மை மிகவும் சோம்பேறியாக்கும் உணவுகள் !

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களில் பெருங்காயத் தூள் வரை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

தூங்கி எழுந்த பின்னரும் களைப்பாக உணர்கிறீர்களா?

பின்பு வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, நார்த்தங்காய் சாற்றினை சேர்த்து நன்கு கிளறி, பின் சாதத்தை சேர்த்து நன்கு பிரட்டினால், நார்த்தங்காய் சாதம் ரெடி !

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)