நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் செய்வது எப்படி?





நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள்

மட்டன் கொத்துக்கறி - 500 கிராம் 

குழம்பு மசாலா தயாரிக்க

முழு தனியா - 5 டேபிள் ஸ்பூன் 

சீரகம் - 2 டேபிள் ஸ்பூன் 

சோம்பு, முழு மிளகு, கசகசா - 1 டேபிள் ஸ்பூன் 

பட்டை -1 துண்டு 

கிராம்பு - 3 

கருவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 5 

சின்ன வெங்காயம் - 1/2 கப் 

பூண்டு - 6 பல் 

இஞ்சி - 2 துண்டு 

உண்ணும் உணவு விஷமாக மாறினால் !

மட்டன் உருண்டை தயாரிக்க

பொட்டுக்கடலை - 250 கிராம் 

கொத்துமல்லி இலை - 1 கப் 

சோம்பு - தேவையான அளவு 

பட்டை - 2

கிராம்பு - 2

சின்ன வெங்காயம் - 6 

பச்சை மிளகாய் - 1 

வரமிளகாய் - 2 

மஞ்சத்தூள் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

உணவு மூலம் உடலில் சேரும் கொழுப்பை கரைக்க !

தாளிக்க

கடுகு - 1 டீஸ்பூன் 

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 1 

கருவேப்பிலை - 1 கொத்து 

கொத்துமல்லி இலை - தேவையான அளவு

செய்முறை :

நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் செய்வது எப்படி?

கொத்துக்கறியை தண்ணீரில் அலசி பிழிந்து வைக்கவும். எண்ணெய் இன்றி, முழு தனியா, பட்டை, கிராம்பு, முழு மிளகு, காய்ந்த மிளகாய், 

சோம்பு, சீரகம் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். மசாலா பொருட்களை ஆறவிட்டு பொடியாக அரைக்கவும். 

கால்மேல் கால்போட்டு உட்காரும் பெண்ணா நீங்கள்? இந்த பிரச்சனைகள் கண்டிப்பா வரும் !

கடாயை சூடாக்கி, 2ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, 2ஸ்பூன் கச கசா சேர்த்து வதக்கவும். ஆறவிட்டு மிக்ஸில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

மிக்ஸில் 250 கிராம் பொட்டுக்கடலை பவுடர் செய்யவும். அடுத்தது அதே மிக்ஸி ஜாரில் ஒரு கப் கொத்துமல்லி இலை, பட்டை, கிராம்பு, 

சோம்பு, ஆறு சின்ன வெங்காயம், இஞ்சி ஒரு துண்டு, 5 பல் பூண்டு, மற்றும் வரமிளகாய் ஒன்று, 2 பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். 

அடுத்தது கொத்துக்கறியை, உப்பு சேர்த்து அரைத்த மசாலாவை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸ் பண்ணவும். நன்கு கலக்கிய பின்பு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும். 
கறி லீஃப் பிரான் செய்வது எப்படி?

மட்டன் லாலிபாப் செய்ய 

சின்ன உருண்டையா எடுத்து வடை போல தட்டி வைக்கவும். எண்ணெய் ஊற்றி தக்காளி சேர்த்து வதக்கவும். 

அரைத்த மசாலாவை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொதித்த பிறகு மட்டன் உருண்டையை சேர்க்கவும். 20 நிமிடங்கள் மூடி வேக வைக்கவும். 

அடுத்தது 2 டேபிள் ஸ்பூன் கடலெண்ணெய் சேர்த்து கடுகு, வெங்காயம், கருவேப்பிலை, பச்சை மொளகா தாளித்து சேர்க்கவும். 

இறுதியாக அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கவும்.
மேட்டுப்பாளையம் மட்டன் குழம்பு செய்வது எப்படி?

கோலா லாலிபாப் செய்வதற்கு

ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றிய பின்பு மட்டன் கோலா லாலிபாப் சேர்த்து நன்கு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.

{சுவையான நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் தயார். இதனை இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, பரோட்டா, மற்றும் ஆப்பம் சாப்பிட நன்றாக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)