குழந்தைகளுக்கு சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் செய்வது எப்படி?

0

குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் வெண்ணெய் சேர்த்த குக்கீஸ் என்றால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் செய்வது

வீட்டிலேயே எளிய முறையில் சாக்லேட் சிப் பிரெட்சல் குக்கீஸ் ரெசிபி செய்யலாம். இன்று டார்க் சாக்லேட் சிப்ஸ் வைத்து குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

உப்பிட்ட வெண்ணெய் - 1/2 கப் ( அறை வெப்ப நிலைக்குக் கொண்டு வரப்பட்டது)

கேஸ்டர் சர்க்கரை - 1/4 கப் 

லைட்/ டார்க் பிரவுன் சுகர் - 1/2 கப் 

வெனிலா எக்ஸ்ட்ராக்ட் - 1 தேக்கரண்டி 

மாவு - 1 &1/2 கப் 

பேக்கிங் பவுடர் - 3/4 தேக்கரண்டி 

பால் - 4 மேசைக்கரண்டி 

டார்க் சாக்லேட் சிப்ஸ் - 3/4 கப்

ஒயிட் சாக்லேட் சிப்ஸ் - 1/4 கப் 

ப்ரெட்செல்கள், நறுக்கியது - 1/2 கப் 

செய்முறை:

ஓவனை 180 டிகிரிக்கு சூடாக்கவும். ஒரு பேக்கிங் டிரேவில் பார்ச்மெண்ட் பேப்பரைப் பரப்பி வைக்கவும். இதை ஓரமாக வைக்கவும்.

ஒரு பெரிய பாத்திரத்தில், வெண்ணெய் கிரீம் பதத்திற்கு மாறும் வரை நன்கு அடிக்கவும். 

அதில் கேஸ்டர் சர்க்கரை, பிரவுன் சுகர் ஆகியவற்றைச் சேர்த்து, மீண்டும் அடிக்கவும், அதன் நிறம் வெளிர் நிறத்திற்கு மாறும் வரை அடிக்கவும்.

வெணிலா எக்ஸ்ட்ராக்ட்டை அதில் சேர்த்து, மீண்டும் கலக்கவும். மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து, நன்கு பிசைந்து கலக்கவும், கெட்டியான மாவாக மாற்றிக் கொள்ளவும்.

கடைசியாக, இதில் சாக்லேட் சிப்ஸ் மற்றும் நறுக்கிய ப்ரெட்சல்களைக் கொட்டி பிசையவும்.

1 மேசைக்கரண்டி அளவு பந்துகளாகப் பிரித்துக் கொண்டு, ஏற்கனவே தயார் செய்து வைத்த பேக்கிங் டிரேவில் வைக்கவும். 

உங்கள் உள்ளங்கையால் லேசாக அழுத்தி விடவும். ஒவ்வொரு குக்கியின் மேலும் ஒரு ப்ரெட்செலை அழுத்தி வைக்கவும்.

10-12 நிமிடங்களுக்கு அல்லது ஓரங்கள் பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். ஓவனில் இருந்து வெளியே எடுத்து, 5 நிமிடங்கள் ஒரு டிரேவில் குளிரச் செய்யவும், 

பிறகு குளிர்விக்கும் ரேக்கில் மாற்றிலும் முழுமையாக குளிர விடவும். (ஓவனில் இருந்து எடுத்தவுடன் குக்கீகள் மிருதுவாக இருக்கும் என்பதால் கவனமாகக் கையாளவும். குளிர்ந்த பிறகே கடினமாகும்.

குறிப்பு :

டார்க் சாக்லேட் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.  அதிக கொலஸ்ட்ரால் இதய நோய் ஆபத்தை குறைக்கும் அதிகரிக்கும் காரணியாகும், எனவே நீங்கள் டார்க் சாக்லேட் சாப்பிட அதிக கொலஸ்ட்ரால் குறையும். 

டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ தமனிகளில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் பயோ ஆக்டிவ் கலவையை கொண்டுள்ளது, இதனால் உங்கள் உடலிலுள்ள உயர் ரத்த அழுத்தம் குறையும்.  

அதிகளவில் இல்லாமல் மிதமான அளவில் டார்க் சாக்லெட்டை சாப்பிட்டு வந்தால் இதய நோய் அபாயம், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் ஆபத்து குறையும்.  இதனால் இதயத்திற்கும் நன்மையுண்டு.  

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)