சத்துமிக்க காலிஃப்ளவர் கீர் செய்வது எப்படி?

சத்துமிக்க காலிஃப்ளவர் கீர் செய்வது எப்படி?

0

அல்லிசின் அதிகமாக இருப்பதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பக்கவாதம் மற்றும் பல இதய கோளாறுகள் தீண்டாமல் காத்துக் கொள்ள முடியும். 

காலிஃப்ளவர் கீர் செய்வது எப்படி?

காலிஃப்ளவர் மன அழுத்தம், இதய நோய்களை குணமாக்கும். புற்றுநோய் செல்களையும் கட்டுப்படுத்துகிறது. காலிஃப்ளவரில் வைட்டமின் கே, மற்றும் ஒமேகா உள்ளது.

இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த காலிஃப்ளவரில் கீர் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை:

காலிஃப்ளவர் துருவல் – ஒரு கப்

ஃபுல் க்ரீம் பால் – ஒரு லிட்டர்

சர்க்கரை – முக்கால் கப்

நெய் – ஒரு டீஸ்பூன்

ஜாதிக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

ஏலக்காய் – 3

கார்ன்ஃப்ளார் (சோள மாவு) – ஒரு டீஸ்பூன்

ஊற வைத்து, பொடியாக நறுக்கிய பிஸ்தா – ஒரு டீஸ்பூன்  

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, கொதிக்க வைத்து இறக்கவும். 

4 டீஸ்பூன் சூடான பாலுடன் சோள மாவு சேர்த்துக் கரைத்துத் தனியாக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய் விட்டு உருக்கி, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். 

அதனுடன் காலிஃப்ளவர் துருவல் சேர்த்து வதக்கவும். பிறகு, பாலை ஊற்றி, அடுப்பைச் சிறு தீயில் வைத்து, காலி ஃப்ளவரைக் குழையும் வரை வேக விடவும். 

பிறகு, சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்தவுடன் ஜாதிக்காய்த்தூள், சோள மாவு கரைசல் சேர்த்துக் கட்டித் தட்டாமல் கிளறி, கொதிக்க விட்டு இறக்கவும். 

ஆறிய பிறகு மேலே பிஸ்தா தூவிப் பரிமாறவும். 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)