பட்டர் வான்கோழி மசாலா செய்வது எப்படி?

பட்டர் வான்கோழி மசாலா செய்வது எப்படி?

0

என்ன தான் வாரா வாரம் சிக்கன், மட்டன், மீன் அப்படினு விதம் விதமா சாப்பிட்டாலும், புதுசா ஏதாச்சும் செஞ்சு வெளுத்து கட்டணும்னு தோணுற ஆசைக்கு மட்டும் அணை போடவே முடியாது.

பட்டர் வான்கோழி மசாலா
ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளைப் போன்றே தற்போது வான்கோழி இறைச்சியும் அசைவ பிரியர்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. இந்த இறைச்சி அதிகச்‌ சுவையுள்ளதாகும்‌. 

ஆண்மையைப்‌ புத்துணர்வு பெற வைக்கும்‌ தன்மை இந்த இறைச்சிக்கு உண்டு. வீரியம்‌ வற்றிய ஆண்களுக்கு அதிகப் படியான வீரியத்தை உற்பத்தி  செய்கிறது. 

இதன்‌ காரணமாகக்‌ காம விருப்பம்‌ அதிகமாகும்‌ என்றும்‌ கூறப்படுகிறது. அடிக்கடி இந்த இறைச்சியை உண்பவர்கள்‌, காம இன்பத்தில்‌ முழுத்‌ திருப்தி அடைவார்கள்‌

சரி விடுங்க எதுக்கு தடை போடணும், சமைக்க தெரியலனா என்ன, நாங்க சொல்லித் தாறோம். கத்துக்கிட்டு அசத்துங்க! முதல்ல தேவையான பொருள்லாம் என்னென்னனு பார்ப்போம்.
தேவையான பொருட்கள் 

வான்கோழி கறி – 1 கிலோ 

வெங்காயம் -1 (சிறுதுண்டாக நறுக்கியது)

தக்காளி – 4 (பொடி பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லி சீரகம் பொடி – 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

கரம் மசாலா – 1/4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 1 (நறுக்கியது)

தக்காளி கெட்சப் – 2 டீஸ்பூன் (தேவைபட்டால்)

முந்திரி (அல்லது பாதாம்) – 10

இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

வர மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி 

கசூரி மேத்தி – 1 தேக்கரண்டி 

ஃப்ரெஷ் க்ரீம் (அல்லது ஹெவி க்ரீம்) – 1/4 கப்

தயிர் – 1/4 கப்

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு ஏற்ப 

கொத்தமல்லி தழை – அழகுபடுத்த

வெண்ணெய் – 2 டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

(nextPage)

செய்முறை

பட்டர் வான்கோழி மசாலா

வான்கோழி கறியை நன்றாக மஞ்சள் தூள் போட்டுக் கழுவி கொள்ளுங்கள். சிறிது உப்பு, சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கசூரி மேத்தி, இஞ்சி பூண்டு விழுது, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து அதனுடன் வான்கோழி கறியை ஊற வையுங்கள். 

குறைந்த பட்சம் 1 மணி நேரம் ஊற விடவும். இந்த மசாலா பொருட்களை எவ்வளவு பயன்படுத்த வேண்டும் என்று தெரியவில்லை என்றால் மசாலாப் பொருட்களுக்கும் பதிலாக 2 டீஸ்பூன் தந்தூரி சிக்கன் மசாலா பொடியை கடையில் வாங்கி பயன்படுத்தலாம்.

நன்கு ஊறிய பிறகு, சிறிதளவு எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றி வான்கோழிக் கறியை மிதமாக வறுக்கவும். அதை இறக்கி வைத்து விடுங்கள்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணையைச் சேர்த்துச் சூடாக்கி, வெங்காயத்தை வதக்கவும், பிறகு இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். 

இவை அனைத்தும் நன்றாக வதங்கியதும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது ஆற விடவும்.

கை பொறுக்கும் சூட்டிற்கு குளிர்ந்த பிறகு, எல்லாவற்றையும் ஒரு மிக்ஸியில் போட்டு முந்திரி பருப்புடன் சேர்த்து ஒரு மென்மையான பேஸ்ட் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். 

ஒரு ஸ்ட்ரைனர் வழியாக வடிகட்டி மகானி சாஸ் தயார் செய்துக் கொள்ளவும்.

அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது வெண்ணெய் சேர்த்து உருக விடவும். தயாரிக்கப்பட்ட மகானி சாஸைச் சேர்த்து, உலர் பருப்புகளை சேர்த்து சில நிமிடங்கள் சமைக்கவும்.

அடுத்து ஊற வைத்த வான்கோழிக் கறி, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள், தேவையான உப்பு மற்றும் தக்காளி கெட்சப் ஆகியவற்றைச் சேர்க்கவும். 

மிதமான  தீயில் 10 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும், இதனால் சுவைகள் நன்றாக இணையும். இறுதியாக நசுக்கிய கசூரி மேத்தி மற்றும் கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்க்கவும். 

ப்ரெஷ் கிரீம் சேர்த்து, எல்லாவற்றையும் கலந்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு அடுப்பை ஆஃப் செய்து விடுங்கள். 

நறுக்கிய கொத்தமல்லி அல்லது சிறிது கிரீம் கொண்டு அலங்கரித்து, புலாவ், நான், ரொட்டியுடன் பரிமாறவும். இது அனைத்துக்கும் ஏற்ற சைட் டிஷ் ஆக இருக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)