போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

போன்லெஸ் மட்டன் மசாலா செய்வது எப்படி?

0

தேவையானவை:

மட்டன் - 250 கிராம்

சின்னவெங்காயம் - 10

பச்சை மிளகாய் - ஒன்று

தக்காளி - ஒன்று

கறிவேப்பிலை - சிறிதளவு

சீரகம் - முக்கால் டீஸ்பூன்

சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகு தூள் - அரை  டீஸ்பூன்

மிளகாய் தூள்  - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - கால்  டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - கால்  கப்

செய்முறை:

போன்லெஸ் மட்டன் மசாலா

மட்டனை நன்கு கழுவி சிறு துண்டுகளாக்கவும். கொழுப்பு உள்ள பீஸ் என்றால் சுவையாக இருக்கும். 

குக்கரில் மட்டன், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி மூடிபோட்டு 20 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும். 

அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 

பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளி, சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை வதக்கவும். 

நன்றாக வதங்கியதும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். 

பச்சை வாடை நீங்கியதும் வேக வைத்த மட்டன் துண்டுகள் மற்றும் மட்டன் வேக வைத்த தண்ணீரைச் சேர்த்து நன்கு கிளறவும். 

தண்ணீர் வற்றும் வரை வேக வைத்து எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கி பிரியாணி, தோசை, ஆப்பம், சாதம், இட்லியுடன் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)