வான்கோழியின் இறைச்சி மற்றும் முட்டை பற்றி அறியாத தகவல்கள் !

வான்கோழியின் இறைச்சி மற்றும் முட்டை பற்றி அறியாத தகவல்கள் !

0

வான்‌ கோழி என்பது நமது நாட்டில்‌ மிகப்‌ பழங்காலம்‌ தொட்டே இருந்து வரும்‌ பறவை அல்ல என்பது ஆய்வாளர்கள்‌ முடிவு ஆகும்‌.

வான்கோழியின் இறைச்சி மற்றும் முட்டை பற்றி அறியாத தகவல்கள் !

ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சிகளைப் போன்றே தற்போது வான்கோழி இறைச்சியும் அசைவ பிரியர்களால் அதிகம் விரும்பப்பட்டு வருகிறது. 

விலை குறைவாகவும் அதே நேரத்தில் ஆரோக்கியம் உடையதாகவும் இருப்பதால் தற்போது வான்கோழி வளர்ப்பிற்கு மவுசு அதிகரித்துள்ளது.

இப்பறவை இனமானது துருக்கி நாட்டிலிருந்து இங்கிலாந்திற்கும்‌ பிற ஐரோப்பிய நாடுகளுக்கும்‌, கொண்டு வரப்பட்ட இனமாகையால்‌, 

அந்த நாட்டின்‌ பெயராலேயே,  அதன் பெயர் டர்க்கி  (Turkey) என ஆங்கிலத்தில்‌ அழைக்கப்படுகிறது என்று கூறுவர்‌.

ஐரோப்பியர்‌ வருகையின்‌ போது தான்‌, இவ்வான்‌ கோழி இனம்‌ இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்‌ எனவும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ கருதுகின்றனர்‌. 

இந்த வான்கோழியை பற்றி 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட எந்த வொரு இலக்கியத்திலும்‌, கல்வெட்டிலும்‌, செப்பேடுகளிலும்‌, 

சிற்பங்களின்‌ உருவங்களிலும்‌, வான்‌கோழி  இல்லை என்பதை மேற்கண்ட கருத்துக்குச்‌ சான்றாகக்‌ காட்டுவார்கள்‌.

வான்கோழியின்‌ வகைகள்‌

வான்கோழியின்‌ வகைகள்‌

வான்கோழிகளுள்‌ பிரான்சு, வொயிட்‌ ஹாலந்து, பார்பான்‌ ரெட்‌, நார்‌ஃபோக்‌, ஸ்லேட்‌, நாரகான்‌ செப்‌, பெல்ட்ஸ்வில்‌ வொயிட்‌ ஆகியவை குறிப்பிடத்தக்க இனங்களாகும்‌. 

ஆயினும்‌, நமது நாட்டில்‌ பெருவாரியாக வளர்க்கப்படுபவை, பல வகைகளின்‌ கலப்பாகத்‌ தோன்றிய பெரிய கருமையான வான்கோழிகளும்‌, சிறிய வெள்ளை நிற வான்கோழிகளும் ஆகும்‌.

வான்கோழி இறைச்சியில்‌ அடங்கியுள்ள சத்துகள்‌ 100 கிராம்‌ வான்கோழி இறைச்சியில்‌ புரதச்‌ சத்து 29.41 கிராமும்‌, கொழுப்புச்‌ சத்து 3.53 கிராமும்‌ இருக்கின்றன

பாஸ்பரச்‌ சத்து 218.82 மி.கிராமும்‌, சோடியம்‌ 63.53 மி.கிராமும்‌, பொட்டாசியம்‌ 304.71 மி.கிராமும்‌, 

சுண்ணாம்புச்‌ சத்து 18.82 மி.கிராமும்‌, இரும்புச்‌ சத்து 1.29 மி.கிராமும்‌ உள்ளன எனவும்‌ ஆய்வுகள்‌ தெரிவிக்கின்றன.

வைட்டமின்களில்‌ தயமின்‌ 0.071 மி.கி, அளவும்‌, ரிப்போஃபிளேவின்‌ 0.13 மி.கிராம்‌ அளவும்‌, 

நியாசின்‌ 6.82 மி.கிராம்‌ அளவும்‌ 100 கிராம்‌ வான்கோழி இறைச்சியில்‌ அடங்கியுள்ளன.

கொலஸ்ட்ராலின்‌ அளவு 69.41 மி.கிராம்‌ ஆகும்‌.

10௦ கிராம்‌ வான்கோழி இறைச்சியானது நமது உடலுக்குச்‌ சுமார்‌ 159 கலோரி சக்தியை அளிக்கவல்லது.

வான்கோழி இறைச்சியின்‌ சித்த மருத்துவக்‌ குணங்கள்‌

வான்கோழி இறைச்சியின்‌ சித்த மருத்துவக்‌ குணங்கள்‌

இந்த இறைச்சி அதிகச்‌ சுவை உள்ளதாகும்‌. ஆண்மையைப்‌ புத்துணர்வு பெற வைக்கும்‌ தன்மை இந்த இறைச்சிக்கு உண்டு. 

வீரியம்‌ வற்றிய ஆண்களுக்கு அதிகப்படியான வீரியத்தை உற்பத்தி செய்கிறது. இதன்‌ காரணமாகக்‌ காம விருப்பம்‌ அதிகமாகும்‌ என்றும்‌ கூறப்படுகிறது. 

அடிக்கடி இந்த இறைச்சியை உண்பவர்கள்‌, காம இன்பத்தில்‌ முழுத்‌ திருப்தி அடைவார்கள்‌.

நன்மைகள்‌ இவ்வாறு இருப்பினும்‌, இந்த இறைச்சிக்குச்‌ சில தீய பண்புகளும்‌ இல்லாமல்‌ இல்லை. 

இந்த இறைச்சியினைத்‌ தொடர்ந்து உண்பவர்களுக்குக்‌ கபம்‌ அதிகரிக்கும்‌ என்றும்‌, கரப்பான்‌ எனனும்‌ தோல்‌ நோய்‌ உண்டாகும்‌ என்றும்‌ பதார்த்த குணபாடம்‌ கூறுகிறது.

வான்கோழி முட்டை

வான்கோழி முட்டை

வான்கோழிகள் 30 ம் வாரம் முட்டையிட ஆரம்பித்து தொடர்ந்து 24வாரங்கள் (54 ம் வாரம்) வரை முட்டையிடும். 

போதுமான தீவனம் மற்றும் செயற்கை முறையில் வெளிச்சமளிக்கும் போது வான்கோழிகள் வருடத்திற்கு 60 லிருந்து 100 முட்டைகள் வரை இடும்

70 சதவிகித வான்கோழிகள் முட்டைகளை பிற்பகலில் தான் இடும். வான்கோழி முட்டைகளின் வெளிப்புறத்தில் பொட்டுகள் போன்று காணப்படும். 

ஒரு வான்கோழி முட்டையின் எடை 85 கிராம் இருக்கும். வான்கோழி முட்டையின் ஒரு முனை கூர்மையாவும் அப்பகுதியில் முட்டையின் ஓடு தடிமனாகவும் இருக்கும். 

வான்கோழி முட்டையில், 13.1 சதம் புரதம், 11.8 சதம் கொழுப்பு, 1.7 சதம் மாவுச்சத்து மற்றும் 0.8 சதம் தாது உப்புகளும் இருக்கின்றன.  

அது போக, முட்டையின் ஒரு கிராம் மஞ்சள் கருவில் 15.67 லிருந்து 23.97 மில்லி கிராம் கொலஸ்டிராலும்  இருக்கிறது.

வான்கோழி இறைச்சி

வான்கோழி இறைச்சி

வான்கோழி இறைச்சியில் கொழுப்பு அதிகம் இல்லாததால் மக்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர். 

வான்கோழி இறைச்சியில் 24 சதம் புரதம், 6.6 சதம் கொழுப்பு மற்றும் நூறு கிராமில் 160 கலோரி எரிசக்தியும் உள்ளன. 

மேலும் தாது உப்புகளான பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, செலினியம் மற்றும் சோடியம் ஆகியனவும் உள்ளன. 

உடலுக்கு அவசியமாக தேவைப்படும் அமினோ அமிலங்களும் வைட்டமின்களான நியாசின், பி6 மற்றும் பி12 ஆகியனவும் வான்கோழி இறைச்சியில் அதிகமாக உள்ளன. 

அது மட்டுமன்றி, உடலுக்குத் தேவைப்படும் முழுமை அடையாத கொழுப்பு அதிகமாகவும், கொலஸ்டிராலின் அளவு குறைவாகவும் இருக்கிறது.

பி6 மற்றும் பி12 ஆகியனவும் வான்கோழி இறைச்சியில் அதிகமாக உள்ளன

ஒரு வியாபார ஆராய்ச்சியின்படி, 10 முதல் 20 கிலோ உடல் எடையுள்ள 24 வார வான்கோழி சேவல் ஒன்றை வளர்க்க ஆகும் செலவு ரூ.300 லிருந்து ரூ400 வரை. 

அதே வான்கோழியினை விற்பனை செய்வதன் மூலம் ரூ.500லிருந்து 600 வரை லாபம் கிடைக்கும். 

இதே போன்று, அதே 24 வார வயதுடைய வான்கோழி பெட்டை ஒன்றை விற்கும் போது ரூ.400 லிருந்து 600 வரை லாபம் கிடைக்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)