நொறுக்குத் தீனி பிரியர்கள் பலருக்கு, இப்பழக்கம் நம் ஆரோக்கியத்தை நொறுக்கி விடுமோ என்ற பயம் இருக்கும்.
இதில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கண் பார்வை, சருமத்துக்கு நலம் பயக்கக்கூடியவை. ஸ்வீட் கார்னில் உள்ள வைட்டமின் பி1 ஞாபகசக்தியை அதிகரிக்க உதவுகிறது.
அதே போல, கார்ன் ஆயிலில் இருக்கும் அதிகப்படியான ஒமேகா 6 பேட்டி ஆசிட், நம் மூளையின் செயல்பாடுகளுக்கும் உடல் நலத்துக்கும் மிகவும் நல்லது.
இந்த ஸ்வீட் கார்ன் உடன் கம்பு சேமியா கலந்து எப்படி ஒரு அருமையான டிஸ் செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை :
பச்சைமிளகாய் விழுது - 1 டீஸ்பூன்,
வேக வைத்த இனிப்பு சோள முத்துக்கள் - 1 கப்,
உப்பு - தேவைக்கு,
சர்க்கரை - 1/4 டீஸ்பூன்.
தாளிக்க...
கடுகு - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 10 இலைகள்.
செய்முறை :
கடாயில் எண்ணெயை காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் விழுது, உப்பு சேர்த்து வதக்கவும்.
வேக வைத்த சோள முத்துக்கள், உதிர்த்த சேமியா, கறிவேப்பிலை, சர்க்கரை சேர்த்து கிளறி பரிமாறவும்.