சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?

0

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல் தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்து விட்டது வீக் எண்ட். 

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி?
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் ரெசிபி.

உணவுகளை வேக வைத்து சாப்பிட்டால் அதில் உள்ள சத்துக்கள் அழியாது. அந்த வகையில் இன்று ஸ்டீம்டு லெமன் ஃபிஷ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உங்களுக்கு பிடித்த மீன் துண்டுகள் - 6

எலுமிச்சை சாறு - இரண்டு டீஸ்பூன்

வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் - இரண்டு டீஸ்பூன்

மிளகு - ¼ டீஸ்பூன்

பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

பூண்டு விழுது - சிறிதளவு

கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை

சத்து நிறைந்த ஸ்டீம்டு லெமன் ஃபிஷ்

மீன் துண்டுகளை சுத்தம் செய்து, அதனுடன் சிறிது உப்பு பூண்டு பேஸ்ட், மிளகு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

பின்னர் அதை ஒரு குக்கரில் வைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். விசில் போட வேண்டாம். மசாலா தடவிய மீன் துண்டுகளை ஸ்டீம் செய்யவும்.

6 முதல் 8 நிமிடங்கள் வரை வைத்து பின்னர் இறக்கவும். இதன் மேல் கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான ஸ்டீம் லெமன் ஃபிஷ் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)