சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட் செய்வது எப்படி?





சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட் செய்வது எப்படி?

1

பழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. உணவாகவும் மருந்தாகவும் செயல்பட்டு, நிறைவான ஊட்டச் சத்துக்களையும் அள்ளித்தருபவை கனிகள்.

சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட்
இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் எட்டிப் பார்க்காது.

கோடையின் வெப்பத்தைத் தணிக்கத் தர்ப்பூசணி, கிரிணி என அந்த அந்தப் பருவத்துக்கு ஏற்ப இயற்கையே பழங்களை வாரி வழங்கி இருக்கும் நிலையில், தினமும் தொடர்ந்து பழவகைகளைச் சாப்பிடுவதே சிறந்தது. 

ஒரு நாளைக்கு ஐந்து கப் அளவுக்கு காய்கறி- பழங்கள் கொண்ட சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

குழந்தைகளுக்கு பழங்களை சாப்பிட கொடுத்தால் சாப்பிட மறுப்பார்கள். இந்த முறையில் பழங்களை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

ருசியான இன்ஸ்டண்ட் பால் கோவா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ஸ்டார் ஃப்ரூட் - 2,

மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு - தலா 1 சிட்டிகை,

கருப்பு திராட்சை, லாலிபாப் குச்சிகள்.

செய்முறை

சத்தான ஃப்ரூட் லாலிபாப் சாலட் செய்வது எப்படி?

ஸ்டார் ஃப்ரூட்டின் விளிம்பை மட்டும் பீட்டரில் சீவி விடவும். மேல்புறம், கீழ்புறம் நறுக்கவும். 

சுவையான எக்லெஸ் மல்டிகிரைன் பால் கேக் செய்வது எப்படி?

பிறகு வட்ட வட்டமாக நறுக்கினால்  இயற்கையாகவே ஸ்டார் வடிவம் கிடைக்கும். மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு கலந்து நறுக்கிய பழத்தில் தூவவும். 

லாலிபாப் குச்சியில்  முதலில் கருப்பு திராட்சை, ஸ்டார் பழம், மீண்டும் திராட்சை, ஸ்டார் பழம் என குத்தி அலங்கரித்து பரிமாறவும்.

சுவைமிக்க மாம்பழ ஃபலூடா செய்வது எப்படி ?

விரும்பினால் கருப்பு  திராட்சைக்கு பதில் பச்சை திராட்சை, செர்ரி குத்தி பரிமாறலாம். அந்ததந்த சீசனில் கிடைக்கும் பழங்களை வைத்தும் இந்த ரெசிபியை செய்யலாம்.

Tags:

Post a Comment

1Comments

Post a Comment