அனைவரும் விரும்பும் லட்சா பரோட்டா செய்வது எப்படி?





அனைவரும் விரும்பும் லட்சா பரோட்டா செய்வது எப்படி?

0

எளிய மக்களின் உணவாக கருதப்படும் பரோட்டா ஜீரணமாக வெகுநேரம் பிடிப்பதால் உழைக்கும் வர்க்கத்தின் மக்கள் பரோட்டாவை விரும்பி உண்டனர்.

அனைவரும் விரும்பும் லட்சா பரோட்டா
அதிலும் சால்னா குருமா இருந்தால் சொல்ல வேண்டியதில்லை. அத்தனை ருசியானது பரோட்டா.

சரி நீ எல்லா கோடுகளையும் அழி நா முதல்ல இருந்தே ஆரம்பிக்கிறேன் என்று புரோட்டா தின்னும் நடிகர் சூரியின் காமெடியை யாரும் மறக்க முடியாது.

மைதா மாவைச் சுத்திகரிக்க பென்சாயில் பெராக்ஸைடு (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். 

அது மட்டுமல்ல, நீரிழிவு (சர்க்கரை) நோய் வர வாய்ப்புகள் அதிகம். இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன. 

பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன் வைக்கப் படுகின்றன. சரி இனி லட்சா பரோட்டா செய்வது எப்படி? என்று இந்த பதிவில் பார்ப்போம்.

தேவையானவை: 

கோதுமை மாவு - 2 கப், 

உப்பு - அரை டீஸ்பூன், 

எண்ணெய் - தேவையான அளவு,

நெய் கலவை - தேவையான அளவு.

செய்முறை: 

அனைவரும் விரும்பும் லட்சா பரோட்டா செய்வது எப்படி?

கோதுமை மாவுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையுங்கள். சிறிதளவு மாவெடுத்து பெரிய சப்பாத்தியாக திரட்டுங்கள். அதன் மேல் எண்ணெய், நெய் கலவையைத் தடவுங்கள். 

பின்பு பாதியாக மடித்து, மீண்டும் எண்ணெய் - நெய் தடவி பாதியாக மடித்து திரட்டுங்கள். மீண்டும் மீண்டும் மடித்து, ஒவ்வொரு மடிப்பிலும் நெய் - எண்ணெய் தடவி (மாவு தொட்டுக் கொள்ளாமல்) திரட்ட வேண்டும். 

தோசை தவாவை காய வைத்து திரட்டியதை போட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எண்ணெய் சேர்த்து நன்கு சுட்டெடுங்கள். சப்பாத்தியை மடித்து மடித்து தேய்ப்பதால், அடுக்கடுக்காக பிரிந்து, மிருதுவாக இருக்கும் இந்த லட்சா.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)