புரதம் மிகுந்த அவித்த மீன் செய்வது எப்படி?





புரதம் மிகுந்த அவித்த மீன் செய்வது எப்படி?

0

மீனில் புரோட்டின், விட்டமின், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. 

புரதம் மிகுந்த அவித்த மீன் செய்வது எப்படி?
வங்காளம், அசாம் மற்றும் நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும். 

அவர்கள் அதிகளவு மீன் உணவுகளை நேசிப்பதை நாம் சில சமயங்களில் வேடிக்கையாக பார்த்திருக்கலாம், இல்லை கேலி கூட செய்திருக்கலாம். 

ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது. 

மீன்களை வறுத்து சாப்பிட்டாலும், வேக வைத்து சாப்பிட்டாலும், குழப்பு வைத்து சாப்பிட்டாலும் ருசி அருமையாக இருக்கும். 

மீன் சமைக்க மிகவும் எளிதானது. ஏனெனில் அதன் சதை பகுதிகள் சீக்கிரத்தில் வேகும் தன்மை கொண்டது. இந்த மீனை அவியல் செய்து சாப்பிடுவது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை: 

மீன் -2, 

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், 

எலுமிச்சைப்பழம் - ஒன்று, 

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன், 

உப்பு - தேவையான அளவு, 

மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், 

தயிர் - ஒரு கப் 

வாழையிலை - ஒன்று.

செய்முறை: 

புரதம் மிகுந்த அவித்த மீன்

முதலில் மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, எலுமிச்சைப் பழச்சாறு, மிளகுத்தூள் எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும். 

சுத்தம் செய்த மீன்களை, இந்தக் கலவையில் 30 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். 

ஊறிய பிறகு, அந்த மீனை எடுத்து வாழையிலை யில் வைத்து மடித்து, இட்லிப் பாத்திரத்தில் வைத்து மூடி அடுப்பை 25 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும். 

அவித்த மீன் ரெடி. கொழுப்புச்சத்து குறைவாகவும் புரதம் மிகுதியாகவும் உள்ள நல்ல உணவு இது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)