சுவையான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு செய்வது எப்படி?

சுவையான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு செய்வது எப்படி?

0

சாதம், புலாவ், நாண், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். 

சுவையான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு
தேவையான பொருட்கள் :  

உருளைக்கிழங்கு - 2,

நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,

தக்காளி - 1,

காய்ந்த மிளகாய் - 3,

கடலைப் பருப்பு - 50 கிராம்,

துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்,

பூண்டு - 5 பல்,

சின்ன வெங்காயம் - 30 கிராம்,

புளி  - அரை எலுமிச்சை அளவு,  

மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டீஸ்பூன்,

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,

பூண்டு - 1 டேபிள் ஸ்பூன்,

மஞ்சள் தூள் - சிறிதளவு,

சோம்பு - ஒரு டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு,

கொத்த மல்லித்தழை - சிறிதளவு,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு

பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

உருளைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

கடலைப்பருப்பு, துவரம் பருப்பை நன்றாக கழுவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு பூண்டு, காய்ந்த மிளகாய், சோம்பு, கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து கொர கொரவென தண்ணீர் விடாமல் அரைத்து கொள்ளவும்.

அரைத்த மாவில் வெங்காயத்தைச் சேர்த்து சிறுசிறு உருண்டைகளாக பிடித்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பூண்டு சேர்த்து வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இத்துடன் மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க விட்டு, உப்பு, கெட்டியாகக் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

கொதி வரும் போது 2 உருண்டைகளை உதிர்த்து குழம்பில் விடவும். மீதமுள்ள உருண்டையையும் குழம்பில் சேர்க்கவும். 

உருண்டைகள் வெந்ததும் இறக்கி பரிமாறவும். சூப்பரான உருளைக்கிழங்கு உருண்டைக் குழம்பு ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)