சுவையான பாஸ்தா வெர்டுரே செய்வது எப்படி?

சுவையான பாஸ்தா வெர்டுரே செய்வது எப்படி?

0

பாஸ்தா இத்தாலிய உணவு வகையாகும். கோதுமையில் செய்யப்பட்ட பாஸ்தாவில் அதிக அளவில் நியாசின், தயாமினும், நார்ச்சத்தும், புரதச் சத்தும் அடங்கி உள்ளது. 

சுவையான பாஸ்தா வெர்டுரே
இதைச் சாப்பிடும் போது பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் நமக்கு முழுமையாகக் கிடைக்கும். இந்த வகை பாஸ்தாக்கள், பி காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட் கொண்டது.

இது நீண்ட குழல், திருகு, பாதி வளைந்த குழல் என பல வடிவங்களில் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த வடிவினை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். 

இதனை நம்முடைய பாணியில் அசத்தலான சுவையில் எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

தேவையானவை:

பாஸ்தா (விருப்பமான வடிவம்) - கால் கிலோ

எண்ணெய் - ஒரு டீஸ்பூன்

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - ஒன்று

குடமிளகாய் - ஒன்று

சீஸ் - 2 டேபிள்ஸ்பூன்

காய்ந்த ரோஸ்மெரி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

வெங்காயத்தாள் - சிறிதளவு

தக்காளி சாஸ் செய்ய:

எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

பூண்டு - 4 பல்

தக்காளி - 5

பச்சை மிளகாய் - 2

பேசில் இலைகள் - சிறிதளவு

மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:

சுவையான பாஸ்தா வெர்டுரே செய்வது எப்படி?

பாஸ்தாவை வேக வைத்து தண்ணீர் வடித்து சிறிது எண்ணெய் விட்டுக் கிளறி வைக்கவும். குடமிளகாயை கியூப் வடிவில் நறுக்கிக் கொள்ளவும்.

சாஸ் செய்ய கொடுத்த பச்சை மிளகாய் மற்றும் தக்காளியைச் சேர்த்து அரைத்து விழுதாக்கிக் கொள்ளவும். 

அடுப்பில் வாணலியை வைத்து சாஸ் செய்ய கொடுத்த எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய பூண்டு, தக்காளி விழுது சேர்த்துக் கிளறவும். 

தக்காளி விழுது சுருண்டு வந்ததும் பேசில் இலைகள், மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால் தக்காளி சாஸ் ரெடி.

அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து வதக்கி, தக்காளி சாஸை ஊற்றி வேக விடவும். 

பிறகு உப்பு, ரோஸ்மெரி சேர்த்துக் கிளறி பாஸ்தா சேர்த்துக் கிளறவும். பாஸ்தா கலவையில் நன்கு மிக்ஸ் ஆனதும் சீஸ் மற்றும் வெங்காயத்தாள் தூவி இறக்கிப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)