குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. அதுவும் ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான 14% அத்தியாவசிய வைட்டமின்களை  உள்ளக்கி யிருப்பதால், இதனை தினமும் சாப்பிடுவது நல்லது.குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம்

ஆப்பிளில் பெக்டின் என்றும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளதால், அவற்றை சாப்பிட உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலானது கரைந்துவிடும். 

ஆப்பிளில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், மூளைச் செல்கள் அழியாமல் பாதுகாப்பதோடு, நரம்பு மண்டலத்தையும் பாதுகாக்கிறது. 

ஆப்பிள் சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் வினிகர் தான் ஆப்பிள் சிடர் வினிகர். வெளிநாட்டில் அனைத்து வீடுகளிலும் அத்தியாவசியமாக வைத்திருக்கும்  பொருள்களில் ஒன்று.

ஜாம் என்றால் பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இன்றைய அவசர உலகில் நிறைய சிற்றுண்டிகளுக்கு (டிஷ்க்கு) ஜாம் தொட்டு சாப்பிடுவதைத் தான் எல்லாரும் விரும்புகிறோம்.

குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் அந்த ஜாம்மை பிரட்டுடன் சேர்த்து, காலை வேளையில் சாப்பிட்டு சென்றால், காலை உணவே தேவைப்படாது.

இத்தகைய ஜாம்மை இதுவரை கடைகளில் வாங்கி தான் சாப்பிடுவோம். ஆனால் இப்போது அந்த ஜாம்மை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். அதிலும் பிடித்த பழங்களை வைத்து செய்யலாம். 

ஆப்பிள் ஜாம் என்பதால் இதில் உள்ள நார்ச்சத்துகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ப்ளோனாய்டுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்கவும் உதவியாக இருக்கும். 

எனவே தான் இது குழந்தைகளுக்கு மிகவும் சிறந்த ரெசிபி ஆகும். இப்போது அவற்றில் ஆப்பிளை வைத்து எப்படி ஜாம் செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் – 1 1/2 கப் (தோலுரித்து நறுக்கியது)

சர்க்கரை – 1/4 கப்

எலுமிச்சை சாறு – 1 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – சிறிது

செய்முறை:

குழந்தைகளுக்கு பிடித்த ஆப்பிள் ஜாம் செய்வது எப்படி?

ஆப்பிளை நன்றாக கழுவி அதன் தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து 2 நிமிடங்கள் வரை சூடுபடுத்தவும். 

நறுக்கிய ஆப்பிள் துண்டுகளை அதில் சேர்த்து தண்ணீர் சேர்க்கவும். 10 நிமிடங்கள் வரை வேக வைத்து நன்றாக மசித்து விடுங்கள்.பிறகு சர்க்கரையை சேர்த்து நன்றாக கிளறவும்.

பிறகு நன்றாக வேக வைத்து கொஞ்சம் ஜாம் யை எடுத்து ஒரு தட்டில் வைத்து வழுக்கும் தன்மையுடன் இருக்கிறதா என்று பதம் பார்க்கவும்.

ஜாம் அப்படி இல்லை யென்றால் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைத்து விடவும். நன்றாக கிளறி ஆற விடவும்.

ஒரு டப்பாக்களில் அடைத்து தேவைப்படும் போது எடுத்து உபயோகித்து கொள்ளலாம். இப்போது சுவையான ஆப்பிள் ஜாம் தயார்.

Tags: