ஆடி மாதத்தில் ஆடி தேங்காய் பால் செய்வது எப்படி?





ஆடி மாதத்தில் ஆடி தேங்காய் பால் செய்வது எப்படி?

0

ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதம். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 மிகவும் சிறப்பான நாள். 

ஆடி தேங்காய் பால்
இந்நாளில் மக்கள் பல்வேறு சுவையான உணவுகளை சமைத்து படைப்பார்கள். 

அதில் ஒன்று தான் ஆடி பால் என்னும் ஆடி தேங்காய் பால். பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மை தான். 

ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போது தான் தேங்காய் கொழுப்பாய் மாறும்.

தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால், அது தான் அமிர்தம். சகல விதமான நோய்களையும் குணமாகக்கும். 

உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். 

உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும். நீங்கள் வரவிருக்கும் ஆடி பெருக்கு அன்று ஆடி பால் செய்ய நினைக்கிறீர்களா? 

ஆனால் அதை எப்படி செய்வதென்று தெரியாதா? கீழே ஆடி தேங்காய் பால் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:

துருவிய தேங்காய் - 1 கப்

நெய் - 3 டீஸ்பூன்

வெல்லம் - 1/2 கப்

வெதுவெதுப்பான நீர் - 2 கப்

முந்திரி - சிறிது

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

ஆடி மாதத்தில் ஆடி தேங்காய் பால் செய்வது எப்படி?

முதலில் மிக்சர் ஜாரில் தேங்காயை போட்டு, ஒரு கப் வெது வெதுப்பான நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை வடிகட்டி பயன்படுத்தி, தேங்காய் பாலை வடிகட்டிக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு கப் கெட்டியான தேங்காய் பால் கிடைக்கும். இதை ஒன்றாம் பால் என்று கூறுவோம்.

பின்னர் வடிகட்டியில் உள்ள அரைத்த தேங்காயை மீண்டும் மிக்சர் ஜாரில் போட்டு, அதில் மீதமுள்ள ஒரு கப் வெது வெதுப்பான நீரை ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதையும் வடிகட்டியில் வடிகட்டி, ஒரு கப் தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இரண்டாம் பால் என்று கூறுவோம்.

பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, அதில் 1/4 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, வெல்லத்தை உருக வைக்க வேண்டும்.

வெல்லம் நன்கு உருகியதும், அதை இறக்கி, வடிகட்டி பயன்படுத்தி வெல்லப்பாகுவை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த வடிகட்டி வெல்லப்பாகு பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் வைத்து, அதில் இரண்டாம் தேங்காய் பாலை ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.

பின் அதில் ஒன்றாம் தேங்காய் பாலை ஊற்றி அடுப்பை அணைத்து பாத்திரத்தை இறக்கிவிட வேண்டும். அடுத்து அதில் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

இறுதியாக ஒரு சிறிது வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து 

அதில் ஊற்றி கிளறினால், சுவையான ஆடி பால் அல்லது ஆடி தேங்காய் பால் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)