சத்துக்கள் நிறைந்த முட்டை கலக்கி செய்வது எப்படி?





சத்துக்கள் நிறைந்த முட்டை கலக்கி செய்வது எப்படி?

0

உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.  நிறையப் பேருக்குப் பிடித்த உணவும் கூட. 

சத்துக்கள் நிறைந்த முட்டை கலக்கி செய்வது எப்படி?

முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். 

உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்ளலாம். 

அதிலும் காலை உணவு ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்யும் நிலையில், அதற்கு தகுந்த உணவாக முட்டை இருக்கிறது. 

இதில் உடலுக்குத் தேவையான நிறைய சத்துகள் அடங்கி யுள்ளன. முட்டையில் விட்டமின் A, D மற்றும் B-12 நிறைவாக உள்ளது. அதோடு புரதச்சத்துக்கு முட்டை தான் சரியான உணவாக இருக்கும். 

உடல் எடையைக் குறைப்போருக்கு முட்டை சாப்பிட பரிந்துரைக்கப் படுகிறது. அதே சமயம் கட்டுமஸ்தான உடலைப் பெறவும் முட்டை சாப்பிடுவார்கள். 

முட்டையின் மஞ்சள் கருவில் விட்டமின் டி சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். 

மூளையின் சுருசுருப்பான இயக்கத்திற்கும், ஞாபகதிறன் அதிகரிக்கவும் முட்டை சாப்பிடலாம். சரி இனி இதனை கொண்டு முட்டை கலக்கி செய்வது எப்படி? என்று இங்கே பார்ப்போம்.

தேவையானவை:

முட்டை - 2

மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - சிறிது 

சிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னா - 2 கரண்டி

நறுக்கிய மல்லித்தழை - சிறிது

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: 

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். அந்த பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். 

பின்பு அதில் சிக்கன் / மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றி, அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். 

தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும். 

நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, மல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும். முட்டை கலக்கி ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)