உலகின் மிக அதிகமான விலை உயர்ந்த உணவுகள்?

உலகின் மிக அதிகமான விலை உயர்ந்த உணவுகள்?

0

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்ற திருமூலர் வாக்கில் தொடங்கி பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்ற பழமொழி வரை அனைத்தும் உணவின் முக்கியத்துவத்தையும், அதன் மூலம் பெறப்படும் உடல் நலத்தையும் எடுத்துரைப்பதாகவே உள்ளன. 

உலகின் மிக அதிகமான விலை உயர்ந்த உணவுகள்?

இரண்டடிக் குறள், 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்' என்கிறது. முன்பு உண்ட உணவு செரிமானம் ஆகிவிட்டது என்பதை அறிந்து பசி எடுத்த பின், அடுத்த வேளை உணவு உட்கொள்ள வேண்டும்.

அவ்வாறு உண்டால், ஒரு மனிதனின் உடலுக்குத் தனியாக மருந்து என எந்தவொரு தேவையும் இருக்காது, அந்த உணவே மருந்தாகும் என்று சொல்கிறது திருக்குறள்.

நான் எல்லாம் வாழுறதே சாப்பிடறதுக்குத் தான் எனச் சொல்லும் உணவுப் பிரியரா நீங்கள், எங்கே ஊருக்கு போனாலும் முதலில் உணவகம் தேடி, 

அந்த ஊரின் ஸ்பெஷாலிட்டி உணவை ருசி பார்க்கும் ரசிகரா? அப்படியானால் இது கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மெனு. 

வைட்டமின் சி நிறைந்த பீட்ரூட் - கேரட் சாலட் செய்வது எப்படி?

உலகின் மிக காஸ்ட்லியான உணவு பதார்த்தங்களின் முழு விபரங்களுடனான மெனு... என்ஜாய் !

ராயல் கோல்ட் பிரியாணி

ராயல் கோல்ட் பிரியாணி

விலை: சுமார் ரூ. 20 ஆயிரம்

இடம்: பாம்பே பர்ரோ உணவகம், துபாய்.

துபாய் சர்வதேச நிதி மையத்தில் (DIFC) உள்ள பம்பாய் போரோ (Bombay Borough) எனப்படும் ஒரு சொகுசு டைன்னிங் ஹோட்டலில் தான் இந்த பிரியாணி கிடைக்கிறது. 

மாங்கொட்டையில் உள்ள நன்மைகள் தெரிந்தால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள் !

இந்த இடம், பிரிட்டிஷ் காலத்தில் ஈர்க்கப்பட்ட பங்களா உட்புறங்களைக் கொண்டுள்ளது. 

மேலும் இங்கு விற்கப்படும் ராயல் கோல்ட் பிரியாணியின் விலை சுமார் 1000 யுஏஇ திராம்கள் ஆகும். அதாவது இந்தியா மதிப்பில் ஒரு பிளேட் பிரியாணியின் விலை ரூ.19,705 ஆகும்.

இந்த 3 கிலோ ராயல் கோல்ட் பிரியாணியை பிளேட்டிங் செய்வதற்கே 45 நிமிடங்கள் எடுக்குமாம். இது ஒரு பெரிய தங்க முலாம் பூசப்பட்ட உலோகத் தட்டில் பரிமாறப்படுகிறது. 

மேலும் அதில் சிக்கன் பிரியாணி ரைஸ், கீமா ரைஸ், குங்குமப்பூ ரைஸ் உள்ளிட்ட மூன்று வகை பிரியாணிகள் பரிமாறப்படுகின்றன. இது தவிர வேக வைத்த பேபி பொட்டேட்டோ மற்றும் வேக வைத்த முட்டைகளும் வைக்கப்படுகின்றன.

ராயல் கோல்ட் பிரியாணி

மேலும் இந்த ஆரோக்கியமான உணவில் மூன்று வகையான சிக்கன் கிரில்ஸ் அதாவது மலாய் சிக்கன், ராஜ்புதன முர்க் சூலா, மற்றும் சிக்கன் மீட்பால்ஸ் ஆகியவையம் பிளேட்டிங்கில் இடம்பெற்றுள்ளன.

பிரமாண்டமான பிரியாணியுடன் மூன்று விதமான சைடு டிஷ்கள் வழங்கப்படுகிறது. அதில் நிஹாரி சலன், ஜோத்புரி சலன், பாதம் டாப்பிங் செய்யப்பட்ட பாதாமி சாஸ் மற்றும் மாதுளை ரைத்தா ஆகியவை அடங்கும்.

இதுதவிர, தட்டில் லாம்ப் சாப்ஸ் மற்றும் லாம்ப் சீக் கபாப் ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இறுதியாக, புதினா, வறுத்த முந்திரி, மாதுளை மற்றும் வறுத்த வெங்காயம் ஆகியவற்றால் இந்த ராயல் கோல்ட் பிரியாணி அலங்கரிக்கப் பட்டுள்ளது. 

டாகோ

டாகோ

விலை: சுமார் ரூ. 18 லட்சத்து 11 ஆயிரம்

இடம்: கிராண்ட் விலாஸ் லாஸ் காபோஸ், மெக்ஸிகோ.

தங்க இதழ்கள் மற்றும் சோளம் கலந்து செய்யப்பட்ட டோர்டில்லா எனப்படும் ஒரு வகை பிரட். உலகின் விலையுயர்ந்த ஜப்பானிய கோப் மாட்டிறைச்சி, 

லாப்ஸ்டர் இறால், பிளாக் ட்ரஃபிள் சீஸ், அல்மாஸ் பெலூகா காவியர் எனும் அரிய வகை மீன் முட்டை (உலகின் மிக விலை உயர்ந்த உணவு பொருள்). 

நாண், சப்பாத்தியுடன் சாப்பிட கொத்தமல்லி- உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?

இந்த காவியர் மட்டுமே ஒரு கிலோ கிராம் 25 லட்ச ரூபாய் மதிப்புள்ளது. 

இதற்கு பயன்படுத்தப்படும் சாஸ் தயாரிக்க மிகவும் அதிக விலையுள்ள மிளகாய், உலகின் விலை உயர்ந்த டக்கீலா மற்றும் உலகின் அதிக விலையுடைய கோபி லுவாக் காபி ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன.

லிண்டெத் ஹொவி சாக்லேட் புட்டிங்

லிண்டெத் ஹொவி சாக்லேட் புட்டிங்

விலை: சுமார் ரூ. 25 லட்சத்து 36 ஆயிரம்

இடம்: லிண்டெத் ஹொவி ஹோட்டல், இங்கிலாந்து.

பெல்ஜியம் நாட்டின் சிறந்த வகையான சாக்லேட், விலையுயர்ந்த ஷாம்பெய்ன் ஜெல்லி, காவியர் (caviar), இவற்றோடு தங்க இதழ்கள் சேர்த்து தயாரிக்கப் பட்டது. 

சப்பாத்திக்கு அருமையான இறால் கிரீன் மசாலா செய்வது எப்படி?

செர்ரிக்குப் பதிலாக 2 காரட் வைரம் வைத்து அலங்கரிக்கப் பட்டது. 2 வாரங்களுக்கு முன்னரே முன்பதிவு செய்தால் மட்டுமே கிடைக்கும்.

ஸ்டில்ட் ஃபிஷெர்மன் இன்டல்ஜன்ஸ்

ஸ்டில்ட் ஃபிஷெர்மன் இன்டல்ஜன்ஸ்

விலை: சுமார் ரூ. 10 லட்சத்து 60 ஆயிரம்

இடம்: தி ஃபோர்ட்ரெஸ் ஹோட்டல், இலங்கை

ஸ்ரீலங்காவின் பிரத்யேக மீன்பிடி முறையான ஸ்டில்ட் ஃபிஷ்ஷிங் செய்யும் மீனவர்களின் உருவம் மற்றும் உயர்ரக சாக்லேட் கொண்டு செய்யப்படும் டெஸெர்ட் உணவு இது. 

உடன் இத்தாலியன் கஸாட்டா எனும் இனிப்பு வகை, ஐரிஷ் பெய்லி கிரீம் எனும் மதுபான வகை மற்றும் மாம்பழம், 

வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

மாதுளை பழங்களால் தயாரிக்கப்பட்ட கம்போட் எனும் பிரெஞ்சு இனிப்பு ஆகியவை சேர்த்து இந்த டெஸெர்ட் உணவு தயாரிக்கப்படுகிறது. 

இதன் மீது இறுதி அலங்காரமாக தங்க இதழ்கள் தூவப்படுகின்றன. இவற்றோடு வாடிக்கையாளர் எடுத்துச் செல்ல 80 காரட் நீலக்கல் அலங்காரமாக வைக்கப் படுகிறது.

ஃப்ளூர் பர்கர் 5000

ஃப்ளூர் பர்கர் 5000

விலை: சுமார் ரூ. 3 லட்சத்து 67 ஆயிரம்

இடம்: ஃப்ளூர் ரெஸ்டாரன்ட், லாஸ் வேகாஸ், அமெரிக்கா.

ப்ரோய்ஷ் ரக ஃபிரெஞ்சு சிறப்பு பன் இந்த பர்கருக்கு பயன்படுத்தப் படுகிறது. உலகின் விலையுயர்ந்த வாக்யூ மாட்டிறைச்சி, பிரத்யேகமாக உணவூட்டப்பட்டு வளர்க்கப்பட்ட வாத்து ஈரல் மற்றும் வாத்து கொழுப்பு 

மற்றும் விலையுயர்ந்த கருப்பு டிரஃபுல் எனும் பூஞ்சை வகை உணவு ஆகியவை சேர்த்து இந்த பர்கர் தயாரிக்கப் படுகிறது. இதனோடு மிகவும் விலையுயர்ந்த அரியவகை மது வகையான 1995 பெட்ருஸ் சேர்த்து பரிமாறப்படுகிறது.

லூயிஸ் XIII பீட்சா

லூயிஸ் XIII பீட்சா

விலை: சுமார் ரூ. 8 லட்சத்து 79 ஆயிரம்

இடம்: ரெனாட்டோ வயோலா, இத்தாலி

இந்த பிட்சாவிற்கான பிரட் தயாரிக்க மட்டும் 72 மணி நேரம் செலவாகிறது. இந்த பிட்சாவிற்கு ஆர்டர் கொடுத்தால் ஒரு பிட்சா செஃப், ஒரு வைன் (wine) ஸ்பெஷலிஸ்ட் வீட்டிற்கே வந்து சமைத்து பரிமாறுவார்கள். 

சுவையான சத்துமிக்க பிரக்கோலி பரோட்டா செய்வது எப்படி?

இதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுக் கலன்களும் கொண்டு வரப்படும். இந்த பிட்சா தயாரிக்க உலகின் விலையுயர்ந்த பெலூகா காவியர் மற்றும் வேறு இரு வகையான காவியர்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

எருமைப்பாலில் தயாரிக்கப்பட்ட ஆர்கானிக் மோசரெல்லா சீஸ் மற்றும் வேறு உயர்ரக 7 வகை சீஸ்கள் பயன்படுத்தப் படுகின்றன. ஆஸ்திரேலியாவின் முர்ரே ஆற்றிலிருந்து எடுக்கப்பட்ட சுவை மிகுந்த பிங்க் உப்பு சேர்க்கப் படுகிறது. 

இவற்றோடு சிலேண்டோ இறால், மான்டிஸ் இறால் மற்றும் லோப்ஸ்டர் என விலை உயர்ந்த கடல் உணவுகள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. இவற்றோடு உயர்ரக மதுபானம் இரண்டும் சேர்த்து பரிமாறப்படுகிறது.

வின்ஸ்டன் காக்டெய்ல்

வின்ஸ்டன் காக்டெய்ல்

விலை: சுமார் ரூ. 8 லட்சத்து 81 ஆயிரம்

இடம்: கிளப் 23, மெல்போர்ன், ஆஸ்திரேலியா.

உலகின் மிக விலையுயர்ந்த மதுபானம் என கின்னஸ் சாதனை படைத்தது இந்தப் பானம். வின்ஸ்டன் சர்ச்சில் நினைவாக வின்ஸ்டன் என பெயர் பெற்றது. 

குளிரூட்டப்பட்ட க்ரே கூஸ் வோட்காவுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கப்பட்டது. இதன் விலைக்குக் காரணம், மிகவும் விலையுயர்ந்த ஒரு காரட் வைரம் உங்கள் கோப்பையின் அடியில் கிடைக்கும். 

நீங்கள் அருந்தும் போது, 'டைமண்ட் இஸ் ஃபாரெவர்' பாடல் பின்னணியில் லைவ் குழுவினரால் வாசிக்கப்படும்.

வெள்ளை காளான்கள்

வெள்ளை காளான்கள்

விலை: சுமார் $ 330,000 ( ரூபாய் 2,47,50,000 )

இடம்: வடக்கு இத்தாலியின் பீட்மாண்ட் பிராந்தியம்

வெள்ளை காளான்கள் இவை ஒன்றும் ஆச்சரியப் படுவதற்கில்லை, உலகின் மிக விலையுயர்ந்த உணவு பண்டம் இந்த வெள்ளை காளான். 

சிறுநீரகம் செயலிழக்கும் என்பதை உணர்த்தும் கிரியேட்டினின் அளவு !

வடக்கு இத்தாலியின் பீட்மாண்ட் பிராந்தியத்தில் காணப்படும், வெள்ளை காளான்கள் உணவு பண்டங்களின் விலை அதன் ஒப்பீட்டளவில் அரிதானது. 

இந்த உணவு பண்டங்கள் பொதுவாக ஒரு கிலோவிற்கு $ 1,350 ( ரூபாய் 1,01,250 ) முதல்$ 2,700 ( ரூபாய் 2,02,500) வரை விற்கப்படுகின்றன. 

அதிகபட்ச விலையாக பதிவு செய்யப்பட்ட விலை 1.5 கிலோ கிராம் மதிப்புக்கு $ 330,000 ( ரூபாய் 2,47,50,000 ) விற்கப்பட்டு இருக்கிறது

செரண்டிபிட்டி 3 சண்டே

செரண்டிபிட்டி 3 சண்டே

விலை: சுமார் $ 1,000 ( ரூபாய் 75,000 )

இடம்: மன்ஹாட்டனின் கிழக்குப் பகுதி

மன்ஹாட்டனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செரண்டிபிட்டி 3 இல் விற்கப்படும் இந்த ஐஸ் கிரீம் தொகுப்பு உலகின் மிக விலையுயர்ந்த இனிப்புகளில் ஒன்றாகும். 

உலகின் மிக விலையுயர்ந்த இனிப்பாக கின்னஸ் புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ள இது, டஹிடிய வெண்ணிலா பீன் ஐஸ்கிரீம், மடகாஸ்கர் வெண்ணிலா, 

குழந்தைகளுக்கு மும்பை ஸ்டைல் பேல் பூரி செய்வது எப்படி? 

23 காரட் உண்ணக் கூடிய தங்க இலை, மற்றும் உலகின் மிக விலையுயர்ந்த சாக்லேட், அமெடி போர்சிலியானா ஆகிய ஐந்து ஸ்கூப்புகளைக் கொண்டுள்ளது. 

இந்த பணக்கார இனிப்பை ஆர்டர் செய்ய, உங்களுக்கு $ 1,000 ( ரூபாய் 75,000)க்கும் அதிகமாக செலவாகும்.

எசென் பிளாட்டினம் கிளப் சாண்ட்விச்

எசென் பிளாட்டினம் கிளப் சாண்ட்விச்

விலை: சுமார் $ 200 ( ருபாய் 15,000 )

இடம்: வான் எசென், பெர்க்ஷயர், இங்கிலாந்து

உலகின் மிக விலையுயர்ந்த சாண்ட்விச் எசென் பிளாட்டினம் கிளப் சாண்ட்விச் ஆகும். இது ஒரு டிரிபிள் டெக்கர் ( மூன்று அடுக்கு ) சாண்ட்விச் ஆகும்.

பால் குடித்தால் இப்டில்லாமா நடக்கும்... உணர்த்தும் சில அறிகுறிகள் !

இதில் மிகச்சிறந்த தரமான கோழி, ஹாம், கடின வேக வைத்த காடைகளின் முட்டை மற்றும் வெள்ளை காளான்கள் உள்ளன. இந்த சாண்ட்விச்சில் கிட்டத்தட்ட 2,000 கலோரிகள் உள்ளன.

இது உலகின் மிக விலை உயர்ந்தது, இது கிட்டத்தட்ட $ 200 ( ருபாய் 15,000) விலைக்கு விற்கப்படுகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த பை ( PIE ) - வாக்யு பீஃப் பை

உலகின் மிக விலையுயர்ந்த பை ( PIE ) - வாக்யு பீஃப் பை

விலை: $ 15,900 ( ரூபாய் 11,92,500 )

இடம்: இங்கிலாந்தின் வடமேற்கு பகுதி

உலகின் மிக விலையுயர்ந்த பை என்பது இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு சமையல்காரரால் 2006 இல் உருவாக்கப்பட்ட ஒரு பாரம்பரிய ஸ்டீக் பை ஆகும். 

நோய் எதிர்ப்பு சக்தியை பெற செய்ய வெண்டியதும், செய்யக்கூடாததும் !

இந்த ஸ்டீக் பைவின் மொத்த செலவு, $ 15,900 ( ரூபாய் 11,92,500 ) ஆகும், அதே நேரத்தில் நீங்கள் ஒரு துண்டு சாப்பிட விரும்பினால், நீங்கள் $ 1,990 ( ரூபாய் 1,49,250 ) செலுத்த வேண்டும்.

இந்த விலையுயர்ந்த பை உள்நாட்டில் வழங்கப்படும் பிரிட்டிஷ் ஸ்டீக் மற்றும் காளான் துண்டுகள், தவிர இது பயன்படுத்தப்படும் பொதுவான பொருட்களின் மிகவும் விலையுயர்ந்த வகைகளில் சிலவற்றைக் கொண்டுள்ளது. 

உள்ளூர் மாட்டிறைச்சிக்கு பதிலாக, அரிதான ஜப்பானிய மாடுகளிடமிருந்து விலையுயர்ந்த வாக்யு மாட்டிறைச்சி ஃபில்லட்டைக் கொண்டுள்ளது. 

உள்ளூர் காளான்களுக்கு பதிலாக, சமையல்காரர் $ 3,330 மதிப்புள்ள அரிய சீன மாட்சுடேக் காளான்கள் மற்றும் கருப்பு காளான்கள் ( truffles ) உணவு பண்டங்களை சேர்த்துள்ளார்.

சுவையான எலும்பு சால்னா செய்வது எப்படி?

உலகின் மிக விலையுயர்ந்த பை தங்க இலைகளால் அலங்கரிக்கப் பட்டுள்ளது, மேலும் 1982 ஆம் ஆண்டு சாட்டே மவுட்டன் ரோத்ஸ்சைல்ட் ( wine ) இரண்டு பாட்டில்களுடன் வழங்கப்படுகிறது. 

இது ஒரு பாட்டிலுக்கு, $4,200 ( ரூபாய் 3,15,000) ஆகும். ஒவ்வொரு வாக்யு மாட்டிறைச்சி பை சுமார் எட்டு பேருக்கு பரிமாறப்படுகிறது. 

நீங்கள் தனியாக சென்று ஒரு துண்டு ஆர்டர் செய்தீர்கள் என்றால் $1,990 ( ரூபாய் 1,49,250 ) விலைக்கு வழங்கப்படும். அதனுடன் உங்களுக்கு ஒரு கிளாஸ் ஷாம்பெயின் வழங்கப்படும் (அதே 1982 சாட்டே மவுடன் ரோத்ஸ்சைல்ட் ஒயின்).

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)