பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தயிர் இட்லி செய்வது எப்படி? - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தயிர் இட்லி செய்வது எப்படி?

அன்றாட உணவில் தவறாமல் சேர்க்கப்படும் பொருள்களில் தயிரும் ஒன்று. பல சத்துக்களை தன்னுள் அடக்கியிருக்கும் தயிரின் ஆரோக்கியம் தரும் நன்மைகள் அதிகமானது.
தயிர் இட்லி செய்வது
தயிரில் வைட்டமின் B-12, கால்சியம் , பாஸ்பரஸ் , மெக்னீசியம் மற்றும் மினரல்கள் உள்ளன. இவை உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச் சத்துகளாகும். 

தயிரில் நிறைவாக உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவும். 

உடலில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகரிக்க அதிகரிக்க உடலில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே அதிகரிக்கும். 

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நன்மை தரும் பாக்டீரியாக்களை உணவு மூலமாக பெறுவதில் தயிர் உதவுகிறது.

கால்சியம் சத்து நிறைந்த தயிரை இட்லியுடன் சேர்த்து தயிர் இட்லி செய்வது பற்றி இன்றைய சமையலில் பார்ப்போம்.

தேவையானவை:  

இட்லி - 6, 

தயிர் - 2 கப், 

கடுகு - அரை டீஸ்பூன், 

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், 

காய்ந்த மிளகாய் - 2 (இரண்டாகக் கிள்ளியது), 

பெருங்காயம் - 1 சிட்டிகை, 

கறிவேப்பிலை - 1 ஆர்க்கு, 

கேரட் - 1, 

மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன், 

உப்பு - தேவைக்கேற்ப, 

எண்ணெய் - 3 டீஸ்பூன்.

செய்முறை:

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தயிர் இட்லி

தயிரை, தண்ணீர் சேர்க்காமல் கடைந்து கொள்ளவும். அதில் உப்பு, மல்லித்தழை சேர்க்கவும். இட்லியை சிறு சதுரத் துண்டுகளாக நறுக்கவும். அதை தயிரில் ஊற வைக்கவும். 

பின்னர் வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் தாளித்து தயிர் இட்லியில் விட்டு கலக்கி விடவும். 

கேரட்டைத் துருவி மேலே தூவி, மல்லித் தழையையும் தூவி அலங்கரிக்கவும். இட்லி மிஞ்சினால் இனி கவலைப்பட வேண்டாம். தயிர் இட்லி ஆக்கி விடுங்கள். பஞ்சாகப் பறந்து விடும்.