குழந்தைகளுக்கு ரைஸ் மோல்ட் குக்கீஸ் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு ரைஸ் மோல்ட் குக்கீஸ் செய்வது எப்படி?

0

அரிசியில் கார், வாலான், மணக்கத்தை போன்ற குறுவை வகைகளும், சீரகச்சம்பா, மிளகுச்சம்பா, கோரைச்சம்பா, நெல்லூர் சம்பா பாஸ்மதி போன்ற சம்பா ரகங்களும் இருக்கின்றன. 

குழந்தைகளுக்கு ரைஸ் மோல்ட்  குக்கீஸ் செய்வது எப்படி?

எந்த ரக அரிசியாக இருந்தாலும் அதை சாதமாகவோ, மாராகரே சமைத்து சாப்பிடும் போது பல நன்மைகளை தருகிறது. 

நீரிழிவு நோயோ, உடல் பருமனோ இருப்பவர்கள் அரிசி சாப்பிடக்கூடாது என்பதும் தேவையில்லாத பயமே. கஞ்சியை வடித்த சாதத்தை அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நன்மையை மட்டுமே அது அளிக்கும். 

அரிசியை கஞ்சியாகவோ, மாவாக அரைத்தும், அவலாக இடித்தும், பொரியாக பொரித்தும், பொங்கலாக குழைத்தும் சாப்பிடலாம்.

இந்த அரிசியை மாவாக அரைத்து அதில் ரைஸ் மோல்ட்  குக்கீஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம், வாருங்கள். 

தேவையான பொருட்கள்

அரிசி மாவு - 1 கப்

உருக்கிய நெய் - 3 ஸ்பூன்

உப்பு - 1/2 ஸ்பூன்

சர்க்கரை - 1கப்

சோடா உப்பு - 1 பின்ச்

குக்கீ கட்டர்

சூடான தண்ணீர் - தேவைக்கேற்ப

எண்ணெய் - பொரிப்பதிற்கேற்ப

செய்முறை :

அரிசி மாவு, உப்பு, சர்க்கரை, சோடா உப்பு இவை அனைத்தையும் கலந்து சூடான தண்ணீர், நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.

10-15 ஊற வைத்த பின். சப்பாத்தி போல் தேய்த்து. விரும்பிய வடிவங்களில் கட் செய்யவும். கட் செய்ததை மிதமான சூட்டில் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்னாக்ஸ் சில நொடிகளில் ரெடி. விருப்பமான வடிவங்களில் உங்கள் குட்டிஸ்க்கு... போட்டி போட்டு சாப்பிடுவாங்க.

குறிப்பு :

தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் இந்திய சமையலறைகளில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது அரிசி மாவு. 

பல உள்ளூர் சமையல் டிஷ்களில் அரிசி மாவு பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நம் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவுவாக இருக்கிறது. 

அரிசி நன்றாக தூளாக அரைக்கப்பட்டு அரிசி மாவு தயாரிக்கப் படுகிறது. வெள்ளை அரிசி மற்றும் பழுப்பு அரிசி இரண்டுமே அரிசி மாவுகளாக பயன்படுத்தப் படுகின்றன. 

அரிசி மாவை கொண்டு பலவகை உணவுகள் செய்யப் படுகிறது. கொழுக்கட்டை முதல் இடியாப்பம், புட்டு, இன்ஸ்டன்ட் இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகளும் முறுக்கு, சீடை, தட்டை போன்ற நொறுக்கு தீனிகள் கூட அரிசி மாவை பயன்படுத்தி செய்யப் படுகிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஆரோக்கியமான ஒன்றாக இருக்கிறது அரிசி மாவு. 

அரிசி மாவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் பழுப்பு அரிசி மாவில் அதிக அளவு பி வைட்டமின்கள் உள்ளன.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)