சத்து மிக்க சிக்கன் சாலட் செய்வது எப்படி?





சத்து மிக்க சிக்கன் சாலட் செய்வது எப்படி?

0

சாலட் செய்வது என்பது மிகவும் ஈஸியான ஒன்று. சாலட் என்றால் நாம் இதுவரை காய்கறி, பழங்களை மட்டும் வைத்து தான் செய்திருக்கிறோம். 

சத்து மிக்க சிக்கன் சாலட்
ஆனால் அதில் சிக்கன் பயன்படுத்தி கூட செய்யலாம். இப்படி செய்வதால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், இவற்றிலேயே கிடைத்து விடுகிறது. 

இது ஒரு வித்தியாசமான சுவையான ரெசிபி. அந்த சிக்கன் சாலட் செய்ய ரெடியா இருக்கீங்களா.

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்

வெங்காயத்தாள் - 4

உலர்ந்த திராட்சை - 25 கிராம்

மயோனைஸ் - 1/2 கப்

வெண்ணெய் - 1/2 ஸ்பூன்

ஆப்பிள் - 1

மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்

உருளைக் கிழங்கு - 250 கிராம்

கருப்பு திராட்சை - 100 கிராம்

தண்ணீர், உப்பு - தேவையான அளவு

செய்முறை :

சத்து மிக்க சிக்கன் சாலட் செய்வது எப்படி?

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு கழுவ வேண்டும். பின் அந்த சிக்கனை ஒரு வாணலியில் போட்டு, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகுத்தூள் போட்டு வேக வைக்கவும். 

சிக்கன் வெந்ததும் அதை இறக்கி குளிர வைக்கவும். பிறகு வெங்காயத் தளை நறுக்கி, வெண்ணெய்யில் பொரிக்கவும். 

பின் உருளைக்கிழங்கை வேக வைத்து, அதன் தோலை உரித்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

அதே போல் ஆப்பிளையும், உருளைக்கிழங்கை வெட்டியதைப் போல் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பின் கருப்பு திராட்சையை கழுவி, இரண்டாக நறுக்கி தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பெரிய பௌலை எடுத்துக் கொண்டு, அதில் வேக வைத்து குளிர வைத்த சிக்கன், பொரித்த வெங்காயத்தாள், 

உலர்ந்த திராட்சை, மயோனைஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு கலக்கவும். பின் அதன் மேல் சிறிது உப்பு, மிளகுத்தூளைத் தூவவும்.

இறுதியாக கருப்பு திராட்சையை வைத்து அலங்கரித்து, ஃபிரிட்ஜில் வைக்கவும். இப்போது குளிர்ச்சியான, சுவையான, வித்தியாசமான சிக்கன் சாலட் ரெடி !

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)