மஷ்ரூம் ரெட் கறி செய்வது எப்படி?





மஷ்ரூம் ரெட் கறி செய்வது எப்படி?

காளான், ஆன்டிஆக்ஸிடென்ட்களை அள்ளித் தருகிறது’ என்பது அண்மையில் ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
மஷ்ரூம் ரெட் கறி
காளானில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் சத்து, உடலில் உள்ள நச்சுப் பொருள்களின் அளவைக் குறைப்பதால், புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்பு குறையும். 

காளானில் உள்ள சில மருத்துவக் குணங்கள் கிருமி நாசினியாகச் செயல்பட்டு, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். 

உடலில் சேரும் கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்வதால் இது, இதயத்துக்கு இதமானது.

இத்தகைய மருத்துவக் குணங்கள் கொண்ட காளானை கொண்டு செய்யப்படும்  மஷ்ரூம் ரெட் கறி செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை: 

மஷ்ரூம் – 100 கிராம், 

பேபிகார்ன் அல்லது பனீர் – 50 கிராம், 

காய்ந்த மிளகாய் – 10, 

பூண்டு – 10 பல், 

தேங்காய்ப் பால் – 2 கப், 


இஞ்சி – சிறிய துண்டு, 

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், 

உப்பு – தேவையான அளவு. 

செய்முறை: 

கடாயில் தண்ணீர் ஊற்றி, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து, இஞ்சி – பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். 
கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். 

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும். பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து மேலும் வதக்கவும். 

பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். அதனுடன் நறுக்கிய பேபி கார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து எல்லாம் வெந்தவுடன் இறக்கவும். 

இப்போது மஷ்ரூம் ரெட் கறி தயார். இதை… சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
Tags: