வீட்டிலேயே எளிமையாக பால் பவுடர் செய்வது எப்படி?





வீட்டிலேயே எளிமையாக பால் பவுடர் செய்வது எப்படி?

0

பால் பவுடர் லாக்டிக் அமிலம் நிறைந்து இருக்கும் இந்த பால் பவுடர் சருமத்திற்கு பல நன்மைகளை தருகிறது. முகபருக்களை அகற்றும். சருமத்தை சுத்தப்படுத்தும். 

வீட்டிலேயே எளிமையாக பால் பவுடர் செய்வது எப்படி?
இறந்த செல்களை நீக்கும். முகத்தை மிருதுவாக்கும். பொதுவாக நாம் பால் பவுடரை ஸ்வீட் ரெசிபி, ஐஸ்கிரீம் ரெசிபி, கேக் ரெசிபி போன்றவற்றை செய்வதற்கு அதிகளவு பயன்படுத்து கின்றோம். 

இருந்தாலும் கடைகளில் பால் பவுடர் மிக அதிக விலையில் விற்கப்படுகின்றது. 

எனவே வீட்டிலேயே மிக எளிமையான முறையில் பால் பவுடர் செய்வது எப்படி என்று நாம் தெரிந்து கொள்வோம் வாங்க. 

தேவையான பொருட்கள்:

பால் - ஒரு லிட்டர்

சர்க்கரை - 100 கிராம்

செய்முறை:-

வீட்டிலேயே எளிமையாக பால் பவுடர்

அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் கடாய் வைத்து அவற்றில் ஒரு லிட்டர் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விடுங்கள்.

பால் நன்கு கொதித்தவுடன் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து, ஒரு கரண்டியை பயன்படுத்தி பாலாடை படியாதவாறு நன்றாக கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 

பாலானது பால்கோவா பதத்திற்கு வரும் அளவிற்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 

பால்கோவா பதத்திற்கு வந்த பின் அடுப்பில் இருந்து இறக்கி சிறு சிறு துண்டுகளாக உதிர்த்து விட்டு, 15 நிமிடங்கள் ஈரப்பதம் இல்லாதவாறு நன்றாக காய விடுங்கள். 

பின் மிக்சி ஜாரில் காய வைத்த பால் துண்டுகளை சேர்த்து அதனுடன் 100 கிராம் சர்க்கரை சேர்த்து நன்றாக பவுடர் போல் அரைத்தெடுத்தால் பால் பவுடர் தயார்.

இப்பொழுது பால் பவுடர் தயார், கடைகளில் அதிக விலைக்கு விற்கப்படும் பால் பவுடரை வாங்குவதற்கு பதில், வீட்டிலேயே மிக சுலபமாக பால் பவுடரை தயார் செய்து விடலாம். 

இவ்வாறு தயார் செய்த பால் பவுடரை நாம் செய்யும் ஸ்வீட் ரெசிபி, ஐஸ்கிரீம் ரெசிபி, கேக் ரெசிபி போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இந்த பால் பவுடர் செய்ய ஆகும் நேரம் அதிக பட்சம் 45 நிமிடங்களே ஆகும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)