நாட்டின் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எப்போதும் எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளில் மீன் கட்டாயம் இருக்கும்.
ஆனால் மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று என்பது உண்மையே. மீன் சாப்பிடுவது முக்கியமானது.
தினமும் மீன் சாப்பிடுவதனால் இரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் தவிர்க்கப்படுகிறது. மீன் சாப்பிடுவதன் மூலம் வைட்டமின் D சத்து கிடைக்கிறது.
மேலும், எலும்பு மற்றும் பற்கள் வலுவாக இருக்கும். வைட்டமின் டி நம் உடலில் உள்ள அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகிறது.
ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீனில் அதிக அளவில் உள்ளதால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைக்க உதவுகிறது.
புளிக்கரைசல் - 15 கிராம்
சங்கரா மீன் - அரை கிலோ
அரைக்க:
தேங்காய் - அரை முடி
மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய
சின்ன வெங்காயம் - 6
மல்லித்தூள் (தனியாத்தூள்) - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
அரைத்த கலவையில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்துத் தாளித்து கரைத்து வைத்துள்ள கலவையில் ஊற்றவும்.
அத்துடன் புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட்டு சுத்தம் செய்த மீனை அதில் சேர்த்து வேக வைத்துப் பரிமாறவும்.