சுவைமிக்க வெந்தய கீரை கோழி குழம்பு எப்படி செய்வது?

சுவைமிக்க வெந்தய கீரை கோழி குழம்பு எப்படி செய்வது?

0

வெந்தய கீரை புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. 

சுவைமிக்க வெந்தய கீரை கோழி குழம்பு

மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது. 

வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. 

நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும். 

மேலும் வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இந்த இரும்புச் சத்துப் உடலில் ஏற்படும் ரத்தசோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை குடித்து வர நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும். 

உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வெந்தயக் கீரை சாப்பிடலாம். இதன் குளுர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை கொடுக்கும்.

வெந்தய கீரை கோழி குழம்பு தயார் செய்வது வெகு சுலபம். வெந்தய கீரை இலைகளுடன் செய்யப்படும் இந்த கோழிக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும்.தேவையானவை :

கோழி கறி – 1/2 கிலோ (கடிக்கும் அளவில் வெட்டப்பட வேண்டும்)

வெந்தய கீரை – 1 கட்டு (2 கப் அளவு)

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

தயிர் – 2 மேசைக்கரண்டி (சிலுப்பியது)

பச்சை மிளகாய் – 2

இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

தக்காளி (கூழ்) – 2

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

சீரகம் – 1/2 தேக்கரண்டி

சோம்பு – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி

தனியா தூள் – 2 தேக்கரண்டி

சீரக தூள் – 1/2 தேக்கரண்டி

சோம்பு தூள் – 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் – 1/2 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை :

கனமான அடிப்பாகம் உள்ள வாணலில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின், சீரகம், சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும், பச்சை வாசம் போகும் வரை வதக்கி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். கோழி கறி, சிலுப்பிய தயிர், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். 

எல்லா தூள்களையும் சேர்க்கவும் (தனியா, சீரகம், மிளகாய், மஞ்சள் and சோம்பு தூள்கள்). தக்காளி கூழ் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும். வறுவல் போல் வேண்டுமானால் தண்ணீர் குறைவாக சேர்க்கவும்.

பாத்திரத்தை மூடி 15 நிமிடங்கள் எண்ணெய் பிரியும் வரை வேக விடவும். இறுதியாக வெந்தய கீரை, கரம் மசாலா சேர்த்து கிளறவும். ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். சுவையான மேத்தி சிக்கன் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)