பெண்கள் உண்ணக்கூடிய உணவுகளில் முக்கியமான உணவுகள் என்ன?

பெண்கள் உண்ணக்கூடிய உணவுகளில் முக்கியமான உணவுகள் என்ன?

0

அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு முக்கியமானது தான். ஆனால், சில உணவுகள் பெண்களைப் பாதிக்கும் பிரச்சனைகளுக்கு நன்மை பயக்கும். 

பெண்கள் உண்ணக்கூடிய உணவுகளில் முக்கியமான உணவுகள் என்ன?
ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவினை எடுத்துக் கொள்வதற்கு கூட நேரமில்லாமல் இருக்கிறது. 

ஆனால், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உங்களின் உடல் பாதுகாக்கப்படுவதுடன், உங்களின் வயதான தோற்றத்தை குறைக்க உதவும். 

அப்படி என்னென்ன உணவுகளை பெண்கள் தங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாம் வாங்க.

கேல் கீரை

கேல் கீரை

கேல் கீரை என்றும் பரட்டைக்கீரை என்று அழைக்கப்படும் இதன் இலைகளில் வைட்டமின் கே சத்து அதிக அளவில் நிரம்பியுள்ளது. 

இது உங்கள் எலும்புகளை வலுவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். அது மட்டுமின்றி, இதில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் காணப்படுகிறது. 

தினசரிக்கு தேவையான 20 சதவீத வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி இந்த கீரையில் உள்ளது. இந்த கீரை மட்டுமின்றி அனைத்து வகை கீரைகளும் பெண்களுக்கு நன்மையே தரும்.

சோயாபீன்

சோயாபீன்

இந்த சுவையான சோயாபீன் விதையில் பைபர், நல்ல கொழுப்புகள் மற்றும் ஐசோப்ளேவோன்கள் எனப்படும் ஈஸ்ட்ரோஜன் போன்ற கலவைகள் உள்ளன. 

மாதவிடாய் சமயத்தில் ஐசோப்ளேவோன்கள் பெண்களுக்கு சிறந்த நண்பானாக விளங்கும். அது மட்டுமின்றி, மார்பக புற்று நோய் வருவதையும் சோயாபீன் விதைகள் தடுக்கும்.

அஸ்பாரகஸ்

அஸ்பாரகஸ்

பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படும் பிரச்சனை எலும்பு சார்ந்தே இருக்கும். அதற்கு வைட்டமின் கே குறைந்த அளவே இருப்பதே காரணம். 

வைட்டமின் கே-வை நீங்கள் அச்பாரகஸ் மூலம் பெறலாம். இதில், நாள் ஒன்றுக்கு தேவையான வைட்டமின் கே மூன்றில் ஒரு பங்கு கிடைக்கிறது. 

அது மட்டுமின்றி, இதில் போலேட் நிறைந்துள்ளது. இது ஸ்பைனா பிஃபிடா போன்ற பிறப்பு குறைபாடுகளைத் தடுக்க உதவுகிறது.

வெண்ணெய்

வெண்ணெய்

வெண்ணெய்யில் கொழுப்பு நிறைந்துள்ளது. ஆனால், அது நல்ல கொழுப்பு தான். 

உண்மையில், வெண்ணெய் நிறைந்த உணவுகள் வயிற்று கொழுப்பை அகற்றவும், கண்கள் மற்றும் சருமத்தைப் பாதுகாக்கவும் உதவும். 

அது மட்டுமின்றி, வெண்ணெய் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும், நல்ல கொழுப்பை அதிகரிக்கவும் உதவும்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸில் நிறைய அளவு புரதம் உள்ளது. மேலும், அவை நார்ச்சத்தும் அதிகம் கொண்டவை. 

பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகரிப்பு ஆகியவற்றைக் குறைக்கலாம்.

திராட்சை

திராட்சை

திராட்சை பழங்களில் குறைந்த அளவிலான சர்க்கரையே உள்ளது. திராட்சை பழத்தில் உள்ள பிளாவனாய்டுகள் பெண்களுக்கு ஏற்படும் சில வகை பக்கவாதத்தை குறைக்க உதவும். 

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை உணவில் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு சேர்த்துக் கொள்ளலாம்.

​பெர்ரி மற்றும் செர்ரி

​பெர்ரி மற்றும் செர்ரி

பெர்ரி மற்றும் செர்ரி இளஞ்சிவப்பு நிறத்தில் மட்டுமின்றி, ஊதா, சிவப்பு, நீல நிறத்தில் கூட உள்ளன. இதில் பிளாவனாய்டுகள், ஆக்சிஜனேற்றங்கள் நிரம்பியுள்ளன. 

அது மட்டுமின்றி, பெர்ரி வகை பழங்கள் ஆரோக்கியமான செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். அத்தோடு, வயதானாலும் மூளையை கூர்மையாக வைத்திருக்க பெர்ரி உதவும். 

கூடுதலாக, உங்கள் சருமத்தை உறுதியாகவும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும் கொலாஜன் என்ற புரதத்தை உருவாக்கும் வைட்டமின் சி சத்து பெர்ரியில் நிரம்பியுள்ளது.

​மத்தி மீன்கள்

​மத்தி மீன்கள்

மத்தி மீனில் ஆரோக்கியமான கொழுப்பும், வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன. அவற்றில் உள்ள ஒமேகா- 3 கொழுப்புகள் தாய்ப் பால் சுரப்பை அதிகப்படுத்தும். 

மேலும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் மத்தி மீனை உட்கொண்டால் வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். மற்ற மீன்களை விட மத்தி மீனில் பாதரசம் குறைந்த அளவிலே உள்ளது.

கீரை

கீரை

பெண்களின் நண்பன் கீரை தான். இதிலுள்ள போலேட் இதய நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும். 

அது மட்டுமின்றி, உங்கள் கண்களையும் உங்களின் விழித்திரையையும் பாதுகாக்கிறது.

பப்பாளி

பப்பாளி

சிவப்பு- ஆரஞ்சு நிறம் கொண்ட பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் லைகோபீன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். 

கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் வாய்ப்பை லைகோபீன் குறைக்கும். இதய நோய்களைத் தடுக்க, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை சரியாக வைக்க பப்பாளி உதவும்.

தயிர்

தயிர்

நீங்கள் ஐம்பது வயதை கடந்தவராக இருந்தால் உங்களுக்கு அதிக அளவில் கால்சியம் தேவை. அதற்கு கால்சியம் நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

​ஆளி விதை

​ஆளி விதை

ஆளி விதையில் உள்ள ஒமேகா- 3 பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை தடுக்க உதவும். ஒமேகா 3-யைப் பெறுவதற்கு ஆளி விதை ஒரு சிறந்த வழியாகும். 

அதே போல் அக்ரூட் பருப்புகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அக்ரூட் பருப்புகளில் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. 

உங்கள் உணவில் ஆளி விதையை சேர்க்கும் முன் உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசித்துக் கொள்ளவும். 

ஏனெனில், நீங்கள் மருந்து உட்கொள்பவராக இருந்தால், சில மருந்துகளின் செயல்பாடுகளை ஆளி விதை பாதிக்கும். எனவே, மருத்துவரை ஆலோசித்துக் கொள்வது நல்லது.

​சர்க்கரைவள்ளிக் கிழங்கு

​சர்க்கரைவள்ளிக் கிழங்கு

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் பி-6, பொட்டாசியம், இரும்புச் சத்து என பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. 

அது மட்டுமின்றி, இதில் வைட்டமின் ஏ-வின் மூலமான பீட்டா கரோட்டின் நிரம்பியுள்ளது. 

கர்ப்பமான மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சர்க்கரைவள்ளிக் கிழங்கை உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

இது உங்களை மட்டுமின்றி வயிற்றில் வளரும் உங்கள் குழந்தையின் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

​பீப் லிவர்

​பீப் லிவர்

பொதுவாக பெண்கள் விரும்பும் உணவுப் பட்டியலில் இந்த உணவு இருக்கவே இருக்காது. பீப் கல்லீரலில் போலேட் மற்றும் போலிக் அமிலம் அதிக அளவில் உள்ளது. 

அதே போல் மாட்டிறைச்சியில் இரும்புச் சத்து, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)