கொத்த மல்லியின் (Coriander) இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. 

நாண், சப்பாத்தியுடன் சாப்பிட கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி?
கொத்தமல்லி இலையில் உள்ள கால்சியம் (Calcium), இரும்பு (Iron) உள்ளிட்ட சத்துக்கள் இணைந்து செயலாற்றும் போது, ரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தம் நீங்கி, ஓய்வு பெறுகிறது. 

இதன் மூலம், இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருப்பதுடன் மாரடைப்பு, இதய நோய்க்கான வாய்ப்பும் குறைகிறது.

கர்ப்பிணிகள் கர்ப்பம் தரித்த மாதத்தில் இருந்து சாப்பிட்டு வந்தால் குழந்தை மிக ஆரோக்கியமாக வளரும். குழந்தையின் எலும்புகள், பற்கள் உறுதி அடையும்.

இது தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, நாண், சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். 

இந்த கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3,

 உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 3 டீஸ்பூன்.

அரைக்க...

கொத்தமல்லி - 1/2 கப்,

பச்சை மிளகாய் - 2,

பூண்டு - 3.

செய்முறை

நாண், சப்பாத்தியுடன் சாப்பிட கொத்தமல்லி - உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து, தோல் நீக்கி, நறுக்கிக் கொள்ளவும். மிக்ஸியில் அரைக்க வேண்டிய பொருட்களை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த விழுதை உருளைக்கிழங்குடன் சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற விடவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு வறுக்கவும். சாதத்துடன் பரிமாறவும்.