குழந்தைகளுக்கு பிடித்த பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்த பலாக்காய் சிப்ஸ் செய்வது எப்படி?

0

பலா பிஞ்சு மற்றும் இளம் காய் சிறந்த காய்கறி உணவாக பயன்படக் கூடியது. சுவையானது. அதில் பல அரிய சத்துக்கள் நிறைந்துள்ளது. இலங்கையில் பலாக்காய் உணவுகளை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். 

பலாக்காய் சிப்ஸ் செய்வதுx
 
அரிசி உணவுக்கு இணையான அளவு மாவு சத்து இதில் உள்ளதால் பலா மரத்தை ‘அரிசி மரம்’ என்றும் அழைக்கின்றனர். 

பலாக்காயில் வைட்டமின் ஏ,பி,சி மற்றும் இரும்புசத்து, பொட்டாசியம், கால்சியம், புரதம் போன்ற சத்துகளும் உயர்தரமான மாவுச் சத்து மற்றும் நார்ச் சத்தும் உள்ளது. 

மேலும் சபோனின், ஐசொபிளாவின், லிக்கினேஸ் போன்ற தாவர ஊட்டசத்துகள் அதில் உள்ளன. அதனால் பலாக்காய் சிறந்த ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக செயல்படுகிறது. 

அதில் உள்ள ‘ஐக்சுலின்’ என்ற சத்து, நமது உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. பலாப்பிஞ்சுக்கு உடலில் உள்ள பித்தத்தை நீக்கும் சக்தி இருக்கிறது. 

ஆண்மையை அதிகரிக்கும் தன்மையும் உள்ளது. பலாக்காய் உணவுகளை உண்ட முப்பது நிமிடங்களில் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். 

இத்தகைய அற்புதம் நிறைந்த பலாக்காயில் சிப்ஸ் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்  :

பலாச்சுளை பழுக்காதவை - 10,

 எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை,

மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்

செய்முறை :

குழந்தைகளுக்கு பிடித்த பலாக்காய் சிப்ஸ் செய்வது

பலாச்சுளையில் உள்ள கொட்டையை நீக்கி விட்டு நீளவாக்கில் மெலிதாக வெட்டிக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றில் லேசாகத் தண்ணீர் தெளித்துக் கலந்து கொள்ளுங்கள்.

வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் பலாக்காய் துண்டுகளை உதிர்த்தாற் போலப் போடுங்கள். நன்றாக வேக விடுங்கள்.

உப்பு கலந்த நீரில் அரை டீஸ்பூன் எண்ணெய் விட்டு, அதை வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றுங்கள். சத்தம் அடங்கியதும் பலாச்சுளைகளை எண்ணெய் வடித்து எடுங்கள்.

இவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு மிளகாய்ப் பொடி தூவிக் கலந்தால் பலாக்காய் சிப்ஸ் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)