சொரியாசிஸ் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும்? உண்மை என்ன?





சொரியாசிஸ் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும்? உண்மை என்ன?

தக்காளி மிகவும் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழமாகும். இதைப் பற்றி எந்த சந்தேகமும் இங்கு இல்லை. அதன் மெல்லிய தன்மை மற்றும் தனித்துவமான சுவையானது 

சொரியாசிஸ் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும்? உண்மை என்ன?
இந்திய உணவு வகைகளில் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது. தக்காளியில் எண்ணற்ற சத்துக்கள் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. 

அதிலும் குறிப்பாக வைட்டமின் ஏ அதிகமாக அடங்கியுள்ளதால் கண் பார்வையை மேம்படுத்தும் சக்தி கொண்டுள்ளது. 

அது மட்டுமில்லாமல் மாலைக்கண் வியாதியைத் தடுக்கும் ஆற்றலும் இவற்றிற்கு உண்டு. இந்த சிட்ரிக் பழம் அதன் பல ஆரோக்கிய நலன்களுக்காக அறியப்படுகிறது.

இதில் இதய நோய் மற்றும் புற்றுநோய் ஆபத்து குறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்க நன்மையாகும்.

தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும் என்று அண்மையில்  மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தற்போது தக்காளியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிக்காமல் ஒரே அளவில்  பராமரிக்க முடியும் என்று பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

சொரியாசிஸ் தக்காளி சாப்பிடுவதால் ஏற்படும்?

இருப்பினும், தக்காளி பல்வேறு வகையான உடல்நலம் தொடர்பான கட்டுக் கதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சிலரின் கூற்றுப்படி, தக்காளி அதிக ஆக்ஸலேட் உள்ளடக்கம் காரணமாக சிறுநீரக கல்லுக்கு வழிவகுக்கும். 

மற்றவர்களின் கூற்றுப்படி, இது நைட்ஷேட் காய்கறிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதால் இது தடிப்புத் தோல் அழற்சியின் சிக்கலைத் தூண்டக்கூடும் என்கிறார்கள். 

இக்கட்டுரையில் தக்காளி சாப்பிடுவதால் சொறி ஏற்படுமா? என்பதை பற்றி காணலாம்.

சொரியாசிஸ்:காரணங்கள் மற்றும் அறிகுறிகள் 

சொரியாசிஸ்:காரணங்கள் மற்றும் அறிகுறிகள்

தோல் சிவப்பதால் செதில்கள் போன்ற வட்டவட்டமான தடிமன்கள்/ புண்கள் ஏற்படுதல், அரிப்பு, தோல் தடிமனாதல், 

வெடிப்புகள் ஏற்படுதல், கை மற்றும் பாதங்களில் கொப்புளங்கள் ஏற்படுதல் போன்றவை சோரியாஸிஸ்-ன் அறிகுறிகள் ஆகும். 

அறிகுறிகள் மிதமானது முதல் மோசமானது வரை காணப்படும். இது அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக ஏற்படுகிறது.

சொரியாசிஸ் ஒரு நீண்டகால சுகாதார நிலை, இதில் புதிய தோல் செல்கள் இருக்கும். ஆரோக்கியமானவற்றின் மேல் உருவாகின்றன. 

இது திட்டுகள் போல் தெரியும் மற்றும் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றும். கூடுதல் செல்கள் அரிப்பு ஏற்படலாம் மற்றும் சில நேரங்களில் விரிசல் மற்றும் இரத்தப்போக்கு கூட ஏற்படலாம்.

நைட்ஷேட் காய்கறிகள்

நைட்ஷேட் காய்கறிகள்

‘நைட்ஷேட் காய்கறிகள் லத்தீன் மொழியில் ‘சோலனேசி’ என்றழைக்கப்படும் தாவரங்களின் குடும்பத்தைச் சேர்ந்தவை. 

இவை பெரும்பாலும் வெயில் அதிகம் இல்லாத நிழல் நிறைந்துள்ள இடத்தில் வளர்வதாலும், இதனுடைய பூக்கள் இரவு நேரத்தில் மட்டும் பூப்பதாலும் ‘நைட்ஷேட் காய்கறிகள்’ என்றழைக்கப்படுகின்றன. 

நைட்ஷேட் காய்கறிகள் எண்ணற்ற ஊட்டச்சத்து கொண்டவை. இவற்றில், சில நச்சுப்பொருட்கள் இருப்பதாக சொல்லபடுகிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள் பழுத்தவுடன் இந்த நச்சு கலவையின் அளவு ‘Nontoxic’ (நச்சுத் தன்மையற்றது) என்று சொல்லும் அளவிற்கு குறைகிறது. 

சில நைட்ஷேட் தாவரங்களின் இலைகள் மற்றும் பழங்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவை, அவற்றை மட்டும் உட்கொள்ளக்கூடாது.

உருளைக்கிழங்கு, தக்காளி, ஆங்கிலத்தில் பெல் பெப்பர் எனப்படும் குடைமிளகாய் மற்றும் கத்தரிக்காய் அனைத்தும் பொதுவான நைட்ஷேட் காய்கறிகள் வகையைச் சார்ந்தவை. 

தக்காளி காரணமா?

தக்காளி காரணமா?

தக்காளி சொரியாசிஸ் அழற்சியைத் தூண்டும் என்ற கூற்றை எந்த ஆராய்ச்சியும் ஆதரிக்கவில்லை. 

தக்காளி ஊட்டச்சத்து அடர்த்தியான காய்கறி என்றும், இதை சாப்பிடுவது உங்கள் சருமம், கண் பார்வை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. 

இந்த காரணத்திற்காக நீங்கள் உங்கள் உணவில் இருந்து தக்காளியை குறைக்க தேவையில்லை.

உங்கள் சொரியாசிஸ் தோல் விரிவடைய வேறு சில காரணங்கள் இருக்கலாம். இருப்பினும், தக்காளி தான் காரணம் என்று நீங்கள் இன்னும் நம்பினால், அதைத் தவிர்க்கலாம்.

வாழ்க்கை முறை

வாழ்க்கை முறை

சொரியாசிஸ்  உண்மையில் ஒரு தன்னுடல் தாக்க நோய்.  உங்கள் சொரியாசிஸின் வகையைப் பொறுத்து தடிப்புகள் பரவலாக பரவும் அல்லது உடலின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் கட்டுபட்டு பரவும்.

ஆனால் சில வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இந்த நிலையை மிகவும் மோசமாக்கும். உங்கள் உணவிலும், பழக்க வழக்கத்திலும் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி இங்கே காணலாம்.

தவிர்க்க வேண்டியவை

சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்கள், க்ரில்டு, வறுத்த மற்றும் ரோஸ்ட்டட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். 

அது எப்பேற்பட்ட ஆரோக்கியமான உணவாக இருந்தாலும், இவ்வாறு சமைத்து சாப்பிட்டால், அது சொரியாசிஸ் நிலைமையை மோசமாக்கும்.

காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது. சொரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.). 

மன அழுத்தம் சொரியாசிஸை அதிகப்படுத்தும். அமைதியாக இருக்கவும், உடற்பயிற்சி செய்யவும், ஒய்வு எடுத்துக் கொள்ளவும்

சிகரெட் பிடிப்பதைத் தவிர்க்கவும். உங்கள் எடையை நிர்வகிக்கவும். எந்த விதமான எரிச்சலுடனும் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்

மன அழுத்த நிலைகளை நிர்வகிக்கவும். ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்கவும். உணவு பழக்க வழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

Tags: