ரமலான் கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் செய்வது எப்படி?

ரமலான் கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் செய்வது எப்படி?

0

பழங்காலத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப்படுகின்றது. 

ரமலான் கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன்


இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும், பி 12 வைட்டமின் களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது. 

இதில் இருக்கும் கால்சியம் சத்தானது எலும்பு மற்றும் பல்களுக்கு வலு சேர்க்கிறது, மற்றும் வயோதிகத்தினால் வரக்கூடிய osteoporosis என்ற எலும்பு வராமல் தடுக்க உதவிகிறது. 

மேலும் பட்டர் சாப்பிடுவதனால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சிக்கன் புரோட்டீன் அதிகம் நிறைந்த ஒரு சுவையான உணவுப் பொருள். 

இந்த சிக்கனைக் கொண்டு பல்வேறு ருசியான உணவுகளைத் தயாரிக்கலாம். அதுவும் ரமலான் நோன்பு சமயத்தில் அனைவரும் சாப்பிடக் கூடிய ஓர் உணவுப் பொருள் என்பதால், மாலை வேளையில் நோன்பை முடித்த பின் 

ஒரு சுவையான உணவை சமைத்து சாப்பிட நினைத்தால், அதற்கு கிளாசிக் இந்தியன் பட்டன் சிக்கன் பொருத்தமாக இருக்கும். குறிப்பாக இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 300 கிராம்

தயிர் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - 1 டீஸ்பூன்

பட்டர் சிக்கன் மசாலாவிற்கு...

பட்டர் - 1 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

பிரஷ் க்ரீம் - 1/4 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

அரைத்த தக்காளி விழுது - 1 கப்

உலர்ந்த வெந்தயக் கீரை - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டீஸ்பூன்

மல்லித் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின்னர் பௌலில் சிக்கனைப் போட்டு, அத்துடன் தயிர், கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, 

உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு பிசைந்து குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிக்கனை 4 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.

ரமலான் கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் செய்வது எப்படி?
பின் அதே வாணலியில் அரைத்த தக்காளி விழுது, உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து பிரட்டி, மூடி வைத்து, சிக்கனை 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இறுதியாக அதன் மேல் பிரஷ் க்ரீம், தேன் மற்றும் உங்களுக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் சிக்கன் முற்றிலும் வேகும் வரை வேக வைக்க வேண்டும்.

சிக்கன் நன்கு வெந்ததும், அதில் உலர்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கிளாசிக் இந்தியன் பட்டர் சிக்கன் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)