வெயிட் லாஸ் லெமன் டிரிங்க் தயார் செய்வது எப்படி?





வெயிட் லாஸ் லெமன் டிரிங்க் தயார் செய்வது எப்படி?

0

தேவையானவை

சீரகம் - 1 டீஸ்பூன்

எலுமிச்சை பழம் - ½

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கிளை

செய்முறை

வெயிட் லாஸ் லெமன் டிரிங்க்

ஒரு பானில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடேற்றவும். கொதி வந்ததும் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.

மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் வைத்த பின் அடுப்பை அணைக்கவும். பிறகு இந்த சீரக தண்ணீர் சூடு ஆறி இளஞ்சூடாக மாற வேண்டும்.

ஒரு கண்ணாடி டம்ளரில், செய்து வைத்த இளஞ்சூடான சீரக தண்ணீரை ஊற்றவும். சீரகம் பாத்திரத்திலே இருக்கட்டும். அவற்றை சேர்க்க வேண்டாம்.

கொட்டை எடுத்த அரை எலுமிச்சை பழத்தை சீரக தண்ணீரில் பிழிந்து விடவும்.இதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் ஊற்றவும்.

ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !

ஸ்பூனால் இந்த லெமன் வெயிட் லாஸ் டிரிங்கை நன்கு கலக்கவும். 7 கறிவேப்பிலை இலைகளை கைகளால் கிழித்து, இந்த லெமன் டிரிங்கில் சேர்க்க வேண்டும்.

என்னென்ன விதிமுறைகள்?

இந்த டிரிங்க் குடிப்பதால் காபி, டீ எதுவும் குடிக்க கூடாது. குளிர் பானங்கள் அருந்தவே கூடாது. பிரசவத்துக்கு பிறகான 6 மாதத்திலிருந்தே குடிக்கத் தொடங்குங்கள்.

2 மாதத்துக்கு நாள்தோறும் வெறும் வயிற்றில் இதைக் குடிக்க வேண்டும். காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். 20-30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி செய்யுங்கள்.

டெங்கு, சிக்குன் குனியா பயப்பட வேண்டாம்?

பலன்கள்

வயிறு உப்புசம், வாயுத் தொல்லை, வயிறு வலி ஆகியவற்றை சீரக தண்ணீர் நீக்கும். லெமன் சேர்ப்பதால் கல்லீரலுக்கு நல்லது. பித்தப்பை நன்கு செயல்படும்.

கொழுப்பை விரைவில் வெளியேற்ற உதவும். கிரேவிங் உணர்வைத் தடுக்கும். தேன் சேர்ப்பதால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.

ஆயுர்வேதத்தில் தேன் சேர்க்கும் அனைத்து மருந்துகளும் உடல் எடையை விரைவில் குறைக்க உதவும்.

விட்டமின், தாதுக்கள் நிரம்பிய பானம் இது. இதயம் சிறப்பாக செயல்படும். ரத்த அழுத்தத்தை சமன் செய்யும்.

நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?

உடலில் உள்ள கொழுப்பை கரைத்து உடலை ஆரோக்கியமாக வைக்கும். அனிமியாவை விரட்டும்.

கெட்ட நச்சுக்களை நீக்கும். மெட்டபாலிசம் சீராகும். சீரான சருமமும் இயற்கையான சரும பொலிவையும் தரும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)