ரேஷன் அரிசியில் இடியாப்பம் வீட்டில் இருந்தே செய்வது எப்படி?





ரேஷன் அரிசியில் இடியாப்பம் வீட்டில் இருந்தே செய்வது எப்படி?

0

ஆவியில் வேக வைத்து சாப்பிடும் பொருட்களில் பொதுவாகவே சத்துக்கள் நிறைந்திருக்கும். அதிலும் பாலிஷ் ஏற்றப்படாத அரிசியை உணவில் சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. 

ரேஷன் அரிசியில் இடியாப்பம் வீட்டில் இருந்தே செய்வது எப்படி?
வீட்டில் ரேஷன் அரிசி இருந்தால் போதும். சுடச்சுட சூப்பரான இந்த இடியாப்பத்தை செய்யலாம். ரேஷன் அரிசியில் இடியாப்பம், வீட்டில் இருந்தபடியே எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா. 

முதலில் 1 கப் அளவு ரேஷன் புழுங்கல் அரிசியை எடுத்து போட்டு, மூன்று முறை தண்ணீரில் நன்றாக அலசி கழுவி விடுங்கள். 

அரிசியில் தண்ணீரை நன்றாக வடித்து விட்டு, கழுவிய அரிசியை ஒரு வெள்ளைத் துணியில் பரப்பி 1/2 மணி நேரத்திலிருந்து 3/4 மணி நேரம் வரை நன்றாக ஆற வைத்துக் கொள்ளவும். 

அரிசியில் ஈரப்பதம் முழுமையாக நீங்கியதும் மிக்ஸியில் போட்டு அரிசியை அரைத்துக் கொள்ளவும். இருப்பினும் கொஞ்சம் கொரகொரப்பாக தான் இருக்கும். 

சல்லடையில் சலித்து மீண்டும் உள்ள குருணையை அரைத்து சலித்து, இப்படி மாவைத் நைசாக தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 

நைசாக அரைத்த இந்த மாவினை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு உப்பு போட்டு சுட சுட தண்ணீரை ஊற்றி, இந்த மாவை பிசைய வேண்டும். 

எக்காரணத்தைக் கொண்டும் பச்சை தண்ணீர் ஊற்றிப் செய்யக்கூடாது. 

இந்த மாவை ஓரளவிற்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து உடன், அந்த மாவை மீண்டும் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளுங்கள். 

முதலிலேயே நிறைய தண்ணீரை ஊற்றி விட்டீர்கள் என்றால், மாவு கட்டி கட்டியாகி விடும். அதற்காகத் தான், முதலில் கெட்டியாக பிசைந்து, மீண்டும் அந்த மாவை கரைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. 

1 கப் அரிசி மாவிற்கு 2 1/2 கப் அளவு தண்ணீர் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். 

அரிசி மாவை தோசை மாவு பதத்திற்கு கரைத்த உடன், அடுப்பில் வைத்து கைவிடாமல் கிண்டும் பட்சத்தில் அது மீண்டும் கட்டி பதத்திற்கு வந்து விடும். 

இந்த மாவு கட்டி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். சூடாக இருக்கும் போதே இந்த மாவை ஒரு கரண்டியை வைத்து நன்றாக அழுத்தம் கொடுத்து பிசைந்து விடுங்கள். 

கை பொறுக்கும் சூடு வந்தவுடன் கையைப் போட்டு நன்றாக பிசைந்து இந்த மாவை எடுத்து இடியாப்ப அச்சில் அல்லது முறுக்கு அச்சில் போட்டு, 

இட்லி தட்டிலேயே இடியாப்பம் பிழிந்து ஆவியில் 15 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுத்தால் சாஃப்டான சூப்பரான இடியாப்பம் தயாராகி இருக்கும். 

ஒரு வேளை உங்களுக்கு இடியாப்ப அச்சில் போட்டு பிழியும் போது இடியாப்பம் அச்சில் வெளியில் வரவில்லை என்றாலும் பயப்பட வேண்டாம். 

ரேஷன் அரிசியில் இடியாப்பம் செய்வது

மீண்டும் சுடு தண்ணிரை வைத்து இடியாப்ப மாவில் போட்டு பிசைந்து இடியாப்பம் பிழிந்தால் கட்டாயம் நன்றாக இடியாப்பம் வரும். 

இதற்கு தோதாக குருமா தேங்காய் பால் எதை வைத்து வேண்டும் என்றாலும் நீங்கள் பரிமாறிக் கொள்ளலாம். அது உங்களுடைய இஷ்டம் தான். 

உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த இடியாப்பம் செய்ய வெளியில் சென்று எந்த பொருட்களையும் வாங்க வேண்டாம். 

தொட்டுக் கொள்ள எதுவுமே இல்லை என்றாலும் வெறும் சர்க்கரையைத் தூவி சாப்பிட்டு கொள்ளலாம். மேலும் இந்த லாக்டவுன் நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)