குழந்தைகளுக்கு பிடித்த காலிஃப்ளவர் சில்லி மசாலா செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த காலிஃப்ளவர் சில்லி மசாலா செய்வது எப்படி?

0

இப்ப கடைகளில் காலிபிளவர் கிடைக்கிறது. காலிஃப்ளவர் என்றாலே குழந்தைகளுக்கும், வீட்டில் இருப்பவர்களுக்கும் மிகவும் பிடிக்கும். 

குழந்தைகளுக்கு பிடித்த காலிஃப்ளவர் சில்லி மசாலா
இந்த காலிபிளவரை வைத்து கொஞ்சம் வித்தியாசமான முறையில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே காலிஃப்ளவர் சில்லி மசாலா ரொம்ப ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம்.

தேவையானவை

காலிஃப்ளவர் சில்லி

காலிஃபிளவர் -  250 கிராம்

மைதா – 1/4 கப், 

கான்ஃபிளவர் மாவு – 4 ஸ்பூன், 

அரிசி மாவு – 1 ஸ்பூன், 

மிளகாய்தூள் – 1 ஸ்பூன், 

கரம் மசாலா – 1/2 ஸ்பூன், 

மிளகு தூள் – 2 சிட்டிகை, 

தேவையான அளவு உப்பு 

எளிதாக செய்யக்கூடிய தயிர் சிக்கன் செய்வது எப்படி?

வெங்காய மசாலா

எண்ணெய் – 2 ஸ்பூன், 

கடுகு – 1 ஸ்பூன், 

பச்சை மிளகாய் – 2, 

பெரிய வெங்காயம் – 2 

கறிவேப்பிலை - ஒரு கொத்து 

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன், 

மிளகாய் தூள் – 1 ஸ்பூன், 

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், 

சீரகத்தூள் – 1/2 ஸ்பூன், 

கரம் மசாலா – 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூளில் செய்யப்படும் கலப்படம் அறிந்து கொள்ள?

செய்முறை

காலிபிளவரை அந்த கொத்தில் இருந்து சிறிய துண்டுகளாக வெட்டி, உப்பு கலந்த சுடு தண்ணீரில் போட்டு 3 நிமிடங்கள் ஊற வைத்து, 

நல்ல தண்ணீரில் போட்டு கழுவி தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சுடு தண்ணீரில் இந்த காலிஃப்ளவர் அதிக நேரம் போடகூடாது. 

பஞ்சமி நிலம் என்றால் என்ன?

மைதா , கான்ஃபிளவர் மாவு,  அரிசி மாவு, மிளகாய்தூள், கரம் மசாலா, மிளகு தூள் ஆகியவற்றை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

இந்த இடத்தில் மைதா மாவுக்குப் பதிலாக ரவையை மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக் கூட சேர்த்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. கெட்டிப் பதத்தில் தயாராக இருக்கும். 

சுடுகாட்டில் நிர்வாண பூஜை.. காதலிக்காக கணவன் கொலை !

இந்த கலவையில் தயாராக இருக்கும் காலிஃப்ளவரை போட்டு, நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். நீங்கள் தயார் செய்திருக்கும் பேஸ்ட், காலிஃபிளவர் முழுவதும் நன்றாக ஒட்டிக் கொள்ளும். 

அதன் பின்பு கடாயில் எண்ணெயை நன்றாக காய வைத்து, காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

காலிஃப்ளவர் உள்ளே வேக வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக காலிஃப்ளவரை பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள். 

இது அப்படியே சாப்பிடுவதற்கு மொறுமோறு வென்று சுவையாக இருக்கும். இந்த சில்லி அப்படியே ஓரமாக இருக்கட்டும். 

அடுத்தபடியாக, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சிறிது சூடு ஏறியதும் கடுகு மற்றும் பச்சை மிளகாயை போட்டு தாளித்து 

ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, நன்றாக வதக்க வேண்டும். 

இந்த உணவை சாப்பிட்டு வந்தால் புற்று நோய், ரத்த அழுத்தம் குறைபாடு வராது !

வெங்காயம் இருக்கும் இடமே தெரியக்கூடாது. இறுதியாக வெங்காயத்திற்கு தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், கரம் மசாலா போட்டு 

இந்த மசாலாவின் பச்சை வாடை போனதும், பின்பு தயாராக பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவர் சில்லியை கடாயில் கொட்டி, நன்றாக கிளறி விட வேண்டும்.

(வெங்காயம் வதக்கும் போது தண்ணீர் எதுவும் ஊற்றி விடக்கூடாது. அந்த எண்ணெயிலேயே தான் ட்ரை ஃப்ரை ஆக வேண்டும்.) 

வெங்காய மசாலாவும் காலிஃப்ளவர் சில்லியும் நன்றாக கலந்த பின்பு, ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ள வேண்டும். 

கொரோனா பாதுகாப்பு உடை  PPE சூட் என்றால் என்ன?

இதற்கு மேலே தேவைப்பட்டால் பச்சை வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி, பக்கத்தில் ஒரு எலுமிச்சை பழத்தை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். 

உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த ஸ்டைல்ல ஒரு வாட்டி செஞ்சு கொடுத்து பாருங்க! அப்புறம் சொல்லுங்க இது எப்படி இருந்துச்சுன்னு.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)