எளிதாக செய்யக்கூடிய தயிர் சிக்கன் செய்வது எப்படி?





எளிதாக செய்யக்கூடிய தயிர் சிக்கன் செய்வது எப்படி?

0

சிக்கன் தயிர் சேர்த்து சமைக்கும் பொழுது ஒரு வகை தனி சுவையுடன் இருக்கும். தயிரின் கிரீம் உள்ள தன்மையால் கிரேவி சுவையுடன் இருக்கும். 

எளிதாக செய்யக்கூடிய தயிர் சிக்கன்

தயிர், கருப்பு மிளகு தூள், கருவேப்பிலை சேர்வதால் சிக்கனில் தனி மணமும் சுவையும் கிடைக்கிறது. எளிதாக செய்யக்கூடிய ஓரு வகை ஆனால் இறுதியில் சுவையுடன் இருக்கும். 

தயிர் சிக்கன் வெள்ளை சாதம், பிரியாணி, புலாவ் அல்லது ரொட்டி வகைகளுடன் பரிமாற ஏற்றது.

தேவையானவை

கோழி இறைச்சி – 1 கிலோ

தயிர் – 1 கிண்ணம் (கடைந்தது)

வெங்காயம் – 1 பெரியது அல்லது 2 சிறியது (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1/ 4 தேக்கரண்டி

வர மிள்காய தூள் – 1 தேக்கரண்டி (அல்லது ருசிக்கேற்ப)

இஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி

கரம் மசாலா பொடி – 1 தேக்கரண்டி

மிளகு தூள் – 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் – 1 அல்லது 2

பொடித்த கரம் மசாலா – 1 தேக்கரண்டி

பட்டை - 1,  

பிரியாணி இலை - 1, 

கிராம்பு - 3

சீரகம் – 1/ 2 தேக்கரண்டி

உப்பு – சுவைக்கேற்ப

கொத்தமல்லி தழை – 1/ 4 கட்டு (பொடியாக நறுக்கியது)

கருவேப்பிலை - அலங்கரிக்க

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

600 ஆண்டுகள் பழமையான கயிற்று பாலம் !

செய்முறை 

கோழி இறைச்சியை தயிருடன் உப்பு மற்றும் மசாலா பொருட்களுடன் கலந்து வைக்கவும். (வர மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகு தூள்) வாணலியில் எண்ணெய் ஊற்றி பொடித்த மசாலா பொடி, சீரகம் போடவும்.

வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இஞ்சி , பூண்டு விழுது சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். கலந்து வைத்த சிக்கனை சேர்த்து வேக விடவும். தண்ணியாக வேண்டும் என்றால் தண்ணீர் சேர்க்கவும்.

மூடி வைத்து 10-15 நிமிடங்கள் வேக விடவும் இடையில் கிளறி விடவும். உப்பு சரி பார்த்து தேவைப்பட்டால் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். தயிர் சிக்கன் பரிமாற தயார்.

செஸ்வான் பிரான் செய்வது எப்படி?

குறிப்பு 

சூடான தயிர் கோழியை வெள்ளை சாதம், பிரியாணி, புலாவ், ரொட்டி வகைகளுடன் பரிமாறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)