நம் உடல் இம்யூனிட்டிக்கு இதை சாப்பிடுவதே நல்லது !





நம் உடல் இம்யூனிட்டிக்கு இதை சாப்பிடுவதே நல்லது !

0

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிவருகிறது. 

நம் உடல் இம்யூனிட்டிக்கு
முதல் அலையைவிட இரண்டாம் அலையில் தான் தொற்று ஏற்படுபவர்களுக்கு அறிகுறிகள் தீவிரமாக இருக்கின்றன. 

இந்த கொடிய பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாக்க மத்திய – மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் தங்களை வைரஸ் தொற்றிடம் இருந்து காத்துக் கொள்ளுமாறு அரசு மக்களைக் கேட்டுக் கொள்கிறது. 

இதோடு கூடுதலாக, தங்கள் உணவுப் பழக்கத்திலும் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம் உடல் இம்யூனிட்டிக்கு இதை சாப்பிடுவதே நல்லது !

அதுவும் நம்முடைய உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் அதீத கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்து வருகிறார்கள். 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகளை தேடி அலைவதில் நம்மில் பெரும்பாலோனோர் கண்டிப்பாக சிரமத்திற்கு உள்ளாவோம். 

இந்த உணவு பொருட்களை தேடி கடைக்கு கடை அலைய வேண்டியதில்லை. இவற்றை நம்முடைய வீடுகளிலேயே ஈசியாக தேடி எடுத்து விடலாம். அவை என்னென்ன உணவு பொருட்கள் என்று இங்கு பார்க்கலாமா!

செறிவூட்டப்பட்ட பால்

செறிவூட்டப்பட்ட பால்

`வைட்டமின் டி செறிவூட்டப்பட்ட பால், எண்ணெய் வகைகளைச் சாப்பிடுங்கள். சீஸ் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவிலும் இந்த வைட்டனின் இருக்கிறது. 

தினமும் முற்பகல் 11 மணியில் இருந்து 2 மணிக்குள்ளாக 15 - 20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நின்றால், உங்கள் உடம்பு தனக்குத் தேவையான `வைட்டமின் டி’யை தானே உருவாக்கிக்கொள்ளும்.

கருப்பு மிளகு

கருப்பு மிளகு

கருப்பு மிளகு என்று அழைக்கப்படும் மிளகு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பண்புகளை கொண்டுள்ளது. 

இதில் இயற்கையாகவே வைட்டமின் சி சத்துக்கள் நிரம்பியுள்ளன. மேலும் பாக்டீரியா மற்றும் நச்சு பொருட்களை உடலில் தேங்க விடாமல் அடித்து விரட்டுகிறது. 

 முருங்கைக்கீரை

முருங்கைக்கீரை

பேரீச்சம் பழத்தில் இருக்கிற இரும்புச்சத்தை விட, முருங்கைக்கீரை, கொள்ளு, கேழ்வரகு, பொட்டுக்கடலை, எள், கறுப்பு கொண்டைக்கடலை, 

ஓட்ஸ், ஆட்டு ரத்தம் மற்றும் ஈரலில் இரும்புச்சத்து அதிகம். இவற்றில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பூண்டு

பூண்டு

இருமல் மற்றும் குளிரீல் இருந்து பாதுகாக்கும் தன்மையை பூண்டு கொண்டுள்ளதால், இது ஒரு நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. 

மேலும் இவை நோயெதிர்ப்பு அமைப்பு கிருமிகளுடன் போராட உதவும் கலவைகளையும் கொண்டுள்ளது. 

இஞ்சி 

இஞ்சி

இஞ்சி, தொண்டையில் ஏற்படும் காயத்தை ஆற்றுப்படுத்துவத்தோடு மார்பு நெரிசலையும் நீக்குகிறது. 

இது நம்முடைய உடலில் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிகவும் தேவையான உந்துதலையும் தருகிறது.

எலுமிச்சை 

எலுமிச்சை

ஜலதோஷத்தைத் தவிர்ப்பதில் அதிசயங்களைச் செய்கிறது எலுமிச்சை. இது அடிப்படையில் பூஞ்சை காளான் மற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. 

எலுமிச்சையில் இயற்கையாக நிகழும் வைட்டமின் சி உள்ளடக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வைத்திருக்க உதவுகிறது.  

நுரையீரல் தொற்றுக்களை குறைக்கிறது. எலுமிச்சை பழத்தில் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது.

மஞ்சள்

மஞ்சள்

இந்த எளிய மசாலா பூஞ்சை காளான் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. 

மேலும் நோயை உருவாக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸுக்கு எதிராக உடலின் இயற்கையான பாதுகாப்பை உருவாக்க உதவுகிறது. 

மஞ்சள் ரத்தத்தை சுத்தம் செய்து உங்கள் சக்திக்கு ஒரு தெளிவான தன்மை அளிக்கிறது. சளி தொந்தரவால் அவதிப்படுபவர்கள், 

தினமும் காலையில் மூக்கடைப்பால் சிரமப்படுபவர்கள், வேப்பிலை, தேன், மஞ்சள், மிளகு இவற்றை உட்கொள்வதன் மூலம் பெரிதும் பலன் பெறலாம்.

தேன் 

தேன்

தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் மகரந்தம், ஆண்டிசெப்டிக் மற்றும் பருவகால ஒவ்வாமைகளை நீக்குகிறது.

இந்த உணவுகளைத் தவிர, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும் சில குறிப்புகளையும் இங்கு வழங்கியுள்ளோம். 

தினசரி உடற்பயிற்சி.

தினசரி உடற்பயிற்சி.

உங்கள் எடை மற்றும் இரத்த சர்க்கரையை கண்காணிப்பு. உங்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்வது . 

சீரான உணவை அன்றாட சேர்த்துக் கொள்வது.  8 மணி நேர கண்டிப்பாக தூங்குவது போன்றவை ஆகும். 

விரதம் 

விரதம்

இந்தக் காலகட்டத்தில் விரதம் இருப்பது, டயட் இருப்பது போன்றவற்றைச் செய்யக் கூடாது. லிக்விட் டயட், க்ராஸ் டயட் கூடவே கூடாது. 

உடல் எடையைக் குறைக்க வேண்டுமென்றால், நடைப்பயிற்சி செய்யுங்கள். டயட் வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)