கொரோனா பரவல் காலத்தில் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதற்காக வைட்டமின் சி சத்து அடங்கிய உணவு பொருள்களை சாப்பிடும்படி அநேகர் கூறுகின்றனர். 

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்து கொரோனாவை கட்டுப்படுத்தும் உணவு !

வைட்டமின் சி சத்தினை போன்றே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கு மிகவும் முக்கியமான ஒரு சத்து துத்தநாகம் (ஸிங்க்) ஆகும்.

நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன் செல் பிரிதல், செல் வளர்ச்சி, காயம் குணமாகுதல் ஆகியவற்றுக்கும் இது உதவுகிறது. 

துத்தநாகத்தை (ஸிங்க்) நம் உடல் சேமித்து வைக்க இயலாது. ஆகவே, தினமும் போதுமான அளவு ஸிங்க் அடங்கிய உணவு பொருள்களை சாப்பிடுவது முக்கியம்.

துத்தநாகம்... நற்சோரம், அஞ்சுவர்ண நிறத்தோன் என சித்தர்களால் அழைக்கப்படும் ஓர் உலோகம். 

நாம் உண்ணும் உணவில் புரதம் போன்ற சத்துகளைக் கிரகித்துக் கொள்ள நூற்றுக்கும் மேலான என்சைம்கள்வேலை செய்கின்றன. அவற்றை ஊக்கப்படுத்தும் பணியைத் துத்தநாகம் செய்கிறது. 

கருவின் வளர்ச்சியில் புரதக்கட்டுமானப் பணிக்கு உதவுவதால் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்குத்  துத்தநாகம் மிகவும் அவசியமானது. 

அடிபட்டால் ஏற்படக்கூடிய காயம் ஆறுவதற்கும் கண், சருமம், தலைமுடி ஆரோக்கியத்துக்கும் வாசனைகளை அறியும் திறனுக்கும் உதவக்கூடியது. 

ஆனால், இந்த துத்தநாகம் நமது உடலில் சேமிக்கப் படுவதில்லை. எனவே,  உணவு மற்றும் ஊட்டச்சத்து மருந்துகளின் மூலம் தான் இதைப் பெற முடியும்.

துத்தநாகம் வழக்கமாக ,துத்தநாக சல்பேட், துத்தநாக அசிடேட், அல்லது துத்தநாக குளுக்கோனேட், போன்ற நீரில் கரையக்கூடிய கலவைகளாக அளிக்கப்படுகிறது. 

விலங்குள் மற்றும் கோழி இவற்றின் இறைச்சியில் துத்தநாகம் (ஸிங்க்) அதிகமாக அடங்கியுள்ளது. 

இவற்றில் வைட்டமின் பி12 மற்றும் புரதமும் காணப்படுகிறது. உடலில் துத்தநாகம் அதிகமாக சேர வேண்டுமானால் தினமும் 1 முட்டை சாப்பிட வேண்டும். 

கொரோனாவை கட்டுப்படுத்த வைட்டமின் சி சத்து அடங்கிய உணவு !
சமைக்காத 100 கிராம் ஆட்டிறைச்சியில் 4.8 மில்லி கிராமும், 85 கிராம் கோழி இறைச்சியில் 2.4 மில்லி கிராமும் துத்தநாகம் காணப்படுகிறது.

துத்தநாகம் போதுமான அளவு கிடைக்கா விட்டால் ஜீரண உறுப்பின் ஆரோக்கியமும், வளர்சிதை மாற்றமும் பாதிக்கப்படும். சரும ஆரோக்கியம் குறைந்து முடி உதிர்தல், வளர்ச்சிக் குறைபாடு போன்றவை ஏற்படும். 

தானியங்கள் பட்டாணி, கொண்டை கடலை, பீன்ஸ், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, புளி போன்ற தாவரங்கள் ஸிங்க் அடங்கியவை. 

இவற்றில் புரதம், வைட்டமின்கள், இரும்புச் சத்து, செம்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. 

160 கிராம் கொண்டை கடலையில் 2.5 மில்லி கிராம் துத்தநாகமும், 100 கிராம் லெகியூம் வகை (பட்டாணி, கொண்டை கடலை, பீன்ஸ், சோயாபீன்ஸ், வேர்க்கடலை, புளி)தாயிங்களில் 4.7 மில்லி கிராம் முதல் 1.27 கிராம் ஸிங்க் உள்ளது.

வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகள்

சிட்ரஸ் பழங்கள்.

சிட்ரஸ் பழங்கள்.

சளி பிடித்த பிறகு பெரும்பாலான மக்கள் வைட்டமின் சி(C) உட்கொள்கிறார்கள். ஏனென்றால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

வைட்டமின் சி(C) வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

பிரபலமான சிட்ரஸ் பழங்கள்

திராட்சைப்பழம்

ஆரஞ்சு

எலுமிச்சை

சமைத்த முட்டைகோஸ்

சமைத்த முட்டைகோஸ்

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். சமைத்த முட்டைகோஸ் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. 

இது எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். 

முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர் முறுமுறுப்பானது, சுவையானது மற்றும் வைட்டமின் சி கொண்டுள்ளது. ஒரு கப் நறுக்கப்பட்ட காலிஃப்ளவரில் 50 மில்லிகிராம் வைட்டமின் சி உள்ளது. 

காலிஃப்ளவர் ஃபைபர், கால்சியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் K ஆகியவற்றை கொண்டுள்ளது.

தக்காளி

தக்காளி

வைட்டமின் சி அதிக அளவில் இருப்பதால் நீங்கள் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது தக்காளி சாப்பிட ஒரு சிறந்த உணவாகும். 

ஒரு தக்காளியில் 16 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது, இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அதிகரிக்க உதவும். அதனை தொடர்ந்து சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது.  

உடலில் கொழுப்பு சேராமல் பாதுகாக்க உதவும்  பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. 

இதனால் அதிக அளவு  சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம்

அன்னாசிப்பழம். சுவையானது, மேலும் வைட்டமின் சி கொண்டுள்ளது. ஒரு கப் அன்னாசி துண்டுகள் சுமார் 80 மில்லி கிராம் வைட்டமின் சி கொண்டவை. 

மேலும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபைபர் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். 'ப்ரோமிலைன்' என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். 

இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது. 'ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. 

ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை 'ப்ரோமிலைனு'க்கு உண்டு. 

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது.

உருளைக்கிழங்கு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் கொண்டுள்ளது.  

உருளை கிழக்கிலும் சிறுநீரக கற்களை உருவாக்கும் கால்சியம் மற்றும் இரும்புச்சத்து இருந்தாலும், அந்த கால்சிய சத்துகளை கரைக்கக்கூடிய மக்னீசிய சத்துகளும் அதிகம் இருக்கிறது. 

சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்க நினைப்பவர்கள், ஏற்கனவே சிறுநீரகக் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள்,

அவ்வப்போது சரியான அளவில் உருளைக் கிழங்குகளை வந்தால் வெகு விரைவில் அவர்கள் சிறுநீரகத்தில் உருவாகியிருக்கும் சிறுநீரகக் கற்களைக் கரைத்து, அவற்றை சிறுநீர் வழியாக வெளியேற்றி விடுகிறது.