அரிசி, பருப்பு வகைகள், சிறு தானியங்கள் அகியவற்றை பல விதமான சேர்க்கைகளில் ஊற வைத்து, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துத் தோசையைப் போல வட்டமாகச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம் அடை..
தற்காலத்தில் பலவிதமான சட்டினிகள் அடையுடன் தொட்டுக் கொள்ள அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்,
மிளகு - ஒரு டீஸ்பூன்,
சீரகம் - அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - கால் கப்,
கடுகு - கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 2,
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும்.
அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும் போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும் போது இறக்கவும்.
ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். சத்தான சுவையான தவலை அடை ரெடி.