அதிக சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலுக்கு இணையான ஆட்டுப்பால் !

அதிக சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலுக்கு இணையான ஆட்டுப்பால் !

0

ஆட்டுப்பால் என்றவுடன் நமது நினைவுக்கு வருபவர் காந்தி தான். இயற்கை மருத்துவ முறைகளில் பெரும் ஈடுபாடு கொண்ட அவர் விரும்பி அருந்தியது ஆட்டுப்பால். 

அதிக சத்துக்கள் நிறைந்த தாய்ப்பாலுக்கு இணையான ஆட்டுப்பால் !
பசு, எருமை மாடுகளின் பாலைக் காட்டிலும் ஆட்டுப் பால் கூடுதல் மருத்துவக் குணங்களுடன் குழந்தைகள், பெரியவர்களுக்குச் செரிக்கக்கூடிய பாலாக இருக்கிறது. 

பசும் பாலை விட ஆட்டுப் பாலில் தான் அதிகம் சத்துக்கள் உள்ளது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதைப்பற்றி இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

ஒவ்வாமை

ஒவ்வாமை

ஆட்டுப்பால் தாய்ப்பாலை ஒத்திருப்பதால், மாடுகளின் பாலை அருந்துவதால் சிலருக்கு ஏற்படும் ஒவ்வாமை ஆட்டுப்பால் அருந்துவதால் ஏற்படுவதில்லை. 

மாட்டுப்பால் அருந்துவதால் ஏற்படும் ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட 93 விழுக்காடு குழந்தைகளில், ஆட்டுப்பால் அப்படிப்பட்ட ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது சில ஆய்வுகளின் மூலம் உறுதியாகி யுள்ளது.

பாலில் உள்ள லாக்டோஸ் என்னும் சர்க்கரையைச் செரிப்பதற்கு லாக்டேஸ் என்னும் நொதி மிகவும் இன்றியமையாதது.

எலும்புத்தேய்வு ஏற்படாமல் காக்கிறது 

எலும்புத்தேய்வு ஏற்படாமல் காக்கிறது

250 மிலி பசுவின் பாலில் 276 மி.கி அளவு கால்சியமும் அதே அளவு ஆட்டுப் பாலில் 327 மி.கி அளவு கால்சியமும் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களுக்கு மிகுந்த வன்மையைக் கொடுக்கக் கூடியது. 

எலும்பு தேய்வு என்னும் ஆஸ்டியோ போரோசிஸ் (Osteoporosis) ஏற்படாமல் தடுக்கிறது. ஒரு நாளுக்குத் தேவையான கால்சியத்தில் 35-40 % ஒரு கப் ஆட்டுப்பாலில் நமக்குக் கிடைத்து விடுகிறது.

இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது

இதயத்துக்கு பாதுகாப்பு அளிக்கிறது

ஆட்டுப்பாலில் உடலுக்கு நன்மை தரக்கூடிய கொழுப்பு அமிலங்கள் இருக்கின்றன. உடலிலுள்ள கொழுப்பு அமிலங்களை சரி செய்வதின் மூலம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது.

மாரடைப்பு, பக்கவாதம்

மாரடைப்பு, பக்கவாதம்

அதன் மூலமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. ஆட்டுப்பாலில் அதிகளவில் பொட்டாசியம் சத்து இருப்பதால் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது 

.பால் செரியாமை அல்லது பால் எதிரெடுத்தல் பசுவின் பாலில் அதிகளவில் லாக்டோஸ் என்னும் சர்க்கரை உள்ளது.

எளிதில் ஜீரணம்

எளிதில் ஜீரணம்

அதை செரிக்க செய்யக்கூடிய லாக்டேஸ் என்னும் நொதி குறைவாக இருப்பின் பாலைச் செரிக்கச் செய்ய முடியாமல் லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்னும் நோய் நிலை ஏற்படும். 

ஆனால், ஆட்டுப்பாலில் லாக்டோஸ் குறைந்த அளவில் இருப்பதால் எளிதில் ஜீரணமாகி விடுகிறது.

இதனால் உடல் நல்ல வளமுடன் இருக்கும். செரிமானம் குறைவாக உள்ள நபர்களுக்கு ஆட்டு பால் மிகவும் சிறந்தது. 

ஆட்டுப்பால் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்ச த்துக்களின் மூலமாக உள்ளது. இது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கு போதுமான அளவில் ஆற்றலை வழங்கும்.

தாய்ப்பாலுக்கு மாற்று

தாய்ப்பாலுக்கு மாற்று

ஆட்டுப் பாலானது, மாட்டுப் பாலைவிட தாய்ப்பாலை ஒத்த பண்புகளை அதிகம் கொண்டிருக்கிறது. 

ஆட்டுப்பாலில் உள்ள பீட்டாகேசின் புரத அமைப்பு தாய்ப்பாலில் காணப்படும் புரத அமைப்பு போன்றே இருக்கிறது. 

ஆட்டுப்பாலில் உள்ள ஒலிகோசேக்ரைடு என்னும் சர்க்கரையின் அமைப்பும் தாய்ப்பாலில் உள்ளது போன்றே காணப்படுகிறது.மேலும் தாய்ப்பால், ஆட்டுப்பாலில் மாட்டுப்பாலைவிட அதிக அளவு செலினியம் காணப்படுகிறது. 

மேற்கூறிய காரணங்களால் பச்சிளம் குழந்தைகளுக்குத் தாய்ப்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பாலே கருதப்படுகிறது.

குழந்தைகளுக்கு உதவும்

குழந்தைகளுக்கு உதவும்

பச்சிளம் குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கும் வயிற்று வலி, வாந்தி, பேதி, மலச்சிக்கல் போன்ற உபாதைகளை ஆட்டுப்பால் அருந்துவதால் பெருமளவில் கட்டுப்படுத்தலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய செலினியம் என்னும் சத்து ஆட்டுப்பாலில் இருப்பதால் நோயின்றி வாழ துணை செய்கிறது. 

இதிலுள்ள சத்துக்கள் ஏறக்குறைய தாய்ப்பாலில் இருப்பதை போலவே உள்ளதால் மிகச்சிறந்த உணவாகிறது.

உயிர்ச்சத்துக்கள் புரதம், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி, பொட்டாசியம், செலினியம், போன்ற சத்துக்கள் ஆட்டுப்பாலில் அடங்கியுள்ளன.

நோய்களை குணப்படுத்துகிறது

நோய்களை குணப்படுத்துகிறது

ஆட்டு பால் நிறைய நோய்களை குணப்படுத்துகிறது என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. டெங்கு மற்றும் பிற நோய்களின் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. 

மஞ்சள் காமாலை நோய்க்கு இயற்கை நிவாரணியாக பயன்படுகிறது. ஆட்டுப் பாலில் காணப்படும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நல்ல செரிமான சக்தியை கொடுக்கும். 

இரைப்பை பிரச்சனை

இரைப்பை பிரச்சனை

பசும்பால் ஆனது அனைத்தையும் குணப்படுத்தும் ஒரு வகை உணவு. இதில் இரும்பு, தாமிரம் போன்ற ஊட்டச் சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள லாக்டோஸ் காரணமாக இரைப்பை பிரச்சனை ஏற்படுகிறது. 

ஊட்டச்சத்து நிபுணர்கள் ஒப்பிடும் போது ஆட்டுப்பாலில் குறைவான சர்க்கரை இருப்பதால் பெரியவர்களுக்கு பசும் பாலுக்கு பதிலாக ஆட்டு பால் கொடுக்கலாம் என்று கூறுகின்றனர். 

அதே சமயம் பாலை நேசிப்பவராகவும் மாட்டு பாலை ஜீரணிக்க முடியாதவராகவும் இருந்தால் மாட்டு பாலுக்கு பதிலாக நீங்கள் ஆட்டு பாலை உபயோகிக்கலாம்.

கல்லீரல் மண்ணீரல் நோய்

கல்லீரல் மண்ணீரல் நோய்

வெள்ளாட்டுப் பாலுடன் நீர் சேர்த்துக் காய்ச்சி கற்கண்டுத் தூள் சேர்த்து காலை மாலை அருந்தினால் கப நோய்கள் நீங்கும். 

கல்லீரல் மண்ணீரல் நோய்களினால் வருந்துபவர்களுக்கு வெள்ளாட்டுப் பாலை உணவாக வழங்கலாம்.

நச்சுத்தன்மை

நச்சுத்தன்மை

முக்கியமாக பசுவுக்கு பால் சுரப்பை அதிகப்படுத்த பயன்படுத்தப்படும் உயிர் ஊக்கிகள் போன்றவை 

ஆடுகளில் பயன்படுத்த படாததால் நச்சுத்தன்மை குறைந்த அல்லது நச்சுத்தன்மை அற்ற உணவாக இதைக் கொள்ளலாம்.

முடிவு

சித்த மருத்துவத்தில் ஆட்டுப்பால்

வெள்ளாட்டுப் பாலானது சித்த மருத்துவத்தில் அனேக மருந்துகள் செய்வதற்கு பயன்படுத்தப் படுகிறது. 

இத்தனை சிறப்புமிக்க ஆட்டுப்பாலை வாய்ப்பு கிடைத்தால் நாமும் அருந்தி பயன்பெறலாமே!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)