குழந்தைகளுக்கு சோயா வறுவல் செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு சோயா வறுவல் செய்வது எப்படி?

0

தேவையானவை :

ஸோயா உருண்டைகள்  (Meal Maker) - 200 கிராம்

இஞ்சி - 1 அங்குலம்

பூண்டு - 6 பல்

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

வியர்வை நாற்றம் அதிகமா வீசுதா? அப்ப இத யூஸ் பண்ணுங்க !

சோள மாவு (Corn Flour) - 2 தேக்கரண்டி

தக்காளி சாஸ் (Tomaot Sauce) -1 தேக்கரண்டி

ஸோயா சாஸ் (Soya Sauce) - 1தேக்கரண்டி

கரம் மஸாலாத்தூள் - அரை தேக்கரண்டி

உப்பு  - தேவையான அளவு

நல்லெண்ணெய் - 200 மில்லி லிட்டர்

செய்முறை :  

குழந்தைகளுக்கு சோயா வறுவல் செய்வது
தண்ணீரைக் கொதிக்க வைத்து ஸோயாவைப் போட்டு 10 நிமிடங்கள் ஆனதும் வடிகட்டிக் கொள்ளவும். ஆறியபின் ஸோயாவைப் பிழிந்து எடுத்து வைக்கவும்.

மறுபடியும் குளிர்ந்த தண்ணீரில் போட்டு நன்றாக பிழிந்து எடுத்து வைக்கவும். ஸோயாவை 2 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை அரைத்துக் கொள்ளவும்.

ஸோயா துண்டுகளுடன், தக்காளி சாஸ், ஸோயா சாஸ், மிளகாய்த்தூள், கரம் மஸாலாத்தூள், சோள மாவு, தேவையான அளவு உப்புத்தூள், அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு இவற்றைக் கலந்து 30 நிமிடங்கள் ஊற விடவும்.

ஸாஸ் வகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் உணவு வகைகளில் உப்பு சரிபார்த்து, தேவைப்பட்டால் மட்டும் உப்பு சேர்க்க வேண்டும்.

கிளியோபட்ராவின் பேரழகிற்கு காரணம் இந்த இயற்கை பொருட்கள் தானாம் தெரியுமா?

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஊற வைத்துள்ள ஸோயா துண்டுகளை கொஞ்சம், கொஞ்சமாகப் போட்டுப் பொரித்து (Deep Fry) எடுத்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)