வாத்து முட்டை, நாட்டுக்கோழி முட்டை எது நல்லது?

வாத்து முட்டை, நாட்டுக்கோழி முட்டை எது நல்லது?

0

வாத்துக்கள் கறிக்காகவும், முட்டைக்காகவும் அதிகம் வளர்க்கப்படுகின்றன. வாத்துக்களை வளர்க்க திறந்த வயல் வெளியும், தண்ணீர் வசதியும் முக்கியமானது. 

வாத்து முட்டை நல்லது?
வாத்துக்களை பட்டி அமைத்து ஊர் ஊராகச் சென்று வளர்ப்பவர்கள் உள்ளனர். வாத்து முட்டையை விட, நாட்டுக்கோழி முட்டையே பல மடங்கு, பலவிதங்களில் சிறந்தது. 

நாட்டுக்கோழி முட்டையை வைத்துப், பலவிதமான சித்த மருந்துகள் (எ.கா; அண்ட தைலம், கண்சொட்டு மருந்து) தயாரிக்கலாம்.

நாட்டுக்கோழி முட்டை எளிதில் செரிக்கத் தக்கது; சத்துக்கள் நிறைந்தது. அவித்த முட்டையை வெறுமையாக உண்டால் கூட, பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் கிடையாது. 

பச்சை முட்டையைக் கூட, மிக மிகக் குறைந்த அளவில், கடும் உடல் உழைப்பாளர்கள், உடற் பயிற்சியாளர்கள் உட்கொள்ளலாம். கொழுப்புச் சத்து குறைவு.

எலும்பு முறிவிற்கான சித்த மருத்துவச் சிகிச்சையில் மருத்துவக் கட்டு போட, நாட்டுக்கோழி முட்டையே பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. 

நாட்டுக்கோழி முட்டை நல்லது?

கண் நோய்கள் தடுப்பு, உடல் எடை குறைப்பு, தலைமுடி பொலிவு போன்ற பல செயல்பாடுகளுக்கு உதவுகிறது. வாத்து முட்டையில் கொலஸ்ட்ரால் அதிகமுள்ளது; அனைத்து உடல் வாகினருக்கும் ஆகாதது. 

பசிமந்தம், வாயு வயிற்றுவலி, தோல்நோய் அதிகரிப்பு உள்ளிட்டவற்றை உண்டாக்கும். வாத்து முட்டையை அவித்து அப்படியே உட்கொண்டால், வாயுத் தொல்லை ஏற்படும்.

அபான வாயு துர்வாடை வீசும். கடுமையான சளி, இருமலின் போது மட்டும் மிளகுத்தூள் அல்லது திரிகடுகத்தூள் தொட்டுக் கொண்டு இதை உட்கொள்ளலாம்.

மருந்துகள் தயாரிக்க எவ்விதத்திலும் உதவாது. தொடர்ச்சியாக, தினமும் உட்கொண்டாலும், பாதிப்புகளை ஏற்படுத்தும். ஆகவே, வாத்து முட்டையை விட, நாட்டுக்கோழி முட்டையே சிறந்தது.

வாத்து முட்டையில், நாட்டுக் கோழி முட்டையை விட, சத்துக்கள் அதிகம் தான். ஆனால், அதிக சத்துச்செறிவே, அதற்குப் பாதகமாகவும் உள்ளது. 

வாத்து முட்டை, நாட்டுக்கோழி முட்டை

அதனால், அதை மிகக் கவனமாகவே உபயோகிக்க வேண்டும். மற்ற கீரைகளை விட, அகத்திக்கீரை அதிக சத்துக்களை உள்ளடக்கியதே. 

அந்த கீரையை, அதிக அளவிலோ, தொடர்ச்சியாகவோ, முக்கால்பத வேக்காட்டிலோ உட்கொண்டால், கடும் பக்கவிளைவுகள் ஏற்படும். 

காரணம், அதன் அதிக சத்துச் செறிவே, அதை எளிதாக யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு அமைந்துள்ளது. அதே நிலை தான் வாத்து முட்டைக்கும்.

வாத்து முட்டையானது, சொறி, சிரங்கு, முதலான தோல் நோய்களை அதிகரிக்கும்; அதிக காம இச்சையைத் தூண்டும்; நாவில், ருசியின்மையை ஏற்படுத்தக் கூடியது.

சாதாரணமாகவே, தோல் அரிப்புள்ளவர்கள் வாத்து முட்டையை அதிகம் உட்கொண்டால், இன்னும் தோல் அரிப்பு அதிகரிக்கும். கொழுப்பும், புரதமும், மிகுந்திருப்பதால், தீவிர நோயாளிகள் உட்கொள்ள இயலாது.

நாட்டுக் கோழி முட்டை , வாதத்தையும், பித்தத்தையும் அதிகரிக்கும். அதற்கு முறிவாக, அதனுடன் மிளகு சேர்த்தால் போதுமானது. 

வாத்து முட்டை, நாட்டுக்கோழி முட்டை எது நல்லது?
ஆனால், தோல் நோய்களை ஏற்படுத்தும் வாத்து முட்டையின் முறிவாக, அதனுடன் எதைச் சேர்க்க முடியும்? சத்துக்கள் மிகுந்துள்ள ஒரே காரணத்தாலேயே, வாத்து முட்டை சிறந்ததாகி விடாது. 

தங்கத்தை விட, தரத்திலும், விலையிலும் உயர்ந்தது பிளாட்டினம். ஆனாலும், மக்கள் அபிமானத்தை வெகுவாகப் பெற்று, பல்வேறு வகைகளிலும் அதிகப் பயன்பாடுடையதாக விளங்குவது தங்கம் தான் அல்லவா?

மனித உடலுக்கு தேவையான புரோட்டீன், கொழுப்பு மற்றும் செலுனியம், ஜிங் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. 

இதன் சுவை கோழிக்கறி முன் பார்த்தால் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது.வாத்து முட்டையின் அளவு பெரியதாக இருக்கும்.

எளிய மக்களுக்கு தேவையான உணவு வாத்து கறி மற்றும் வாத்து முட்டை. எனவே, வாத்து வளர்ப்பு என்ற தொழில் செய்து பிழைப்பவர்களும், அதை உண்டு வாழ்பவர்களும் புத்திசாலிகளே.வாத்துக்கள் அல்ல.

கோழி முட்டை, வாத்து முட்டை வேறுபாடு

கோழி முட்டை, வாத்து முட்டை வேறுபாடு

கோழி முட்டை

தன்மை: சூடும் , கொழுமை யும் ஆகும்

நன்மை : விந்து விளையும் , தாது விருத்தி அதிகரிக்கும்.

உடல் தழைக்கும், இரத்தம் அதிகரிக்கும், சூட்டைப்பற்றி ய பீனிசத்தை மாற்றும், கோழி முட்டையை அரை வரிசை வேக வைக்கும் பொழுது இந்த குணங்களை காட்டும்.

நோய் : அதிகமாக வெந்தால் காற்று அதிகரிக்கும் , மந்தப்படும்.

மாற்று : சூட்டு உடலுக்கு நாட்டுக்காடி, குளிர்ச்சி உடலுக்கு குல்கந்து

வாத்து முட்டை

தன்மை : குளிர்ச்சியும் , சிலிர்ப்புமாகும்.

நன்மை : உடல் வலிமை ஏற்படும் , உடல பருக்கும்.

நோய் : மந்திக்கும் , வயிறு வலிக்கும் , காற்று அதிகரிக்கும்.

மாற்று : இஞ்சி , சீரகம் , கொத்தமல்லி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)