ராகியில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால், எலும்பு, பற்கள் என அத்தனைக்கும் நல்லது. குறிப்பாக, கோடை காலத்தில் இதை சாப்பிடுவது நல்லது.
கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால், இக்காலத்தில் ராகியை உணவில் சேர்த்து வந்தால், உடல் வெப்பமானது குறையும்.
அத்தகைய சிறப்பு மிக்க ராகியில் ஆம்லெட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
1 கப் - ராகி மாவு
1/2 ஸ்பூன் - மிளகு சீரக தூள்
3 - முட்டை
1 ஸ்பூன் - கரம் மசாலா
3/4 ஸ்பூன் - உப்பு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் முட்டையை ஊற்றி நன்கு அடித்துக் கூலாக கட்டியில்லாமல் கலக்கி கொள்ள வேண்டும்.
பிறகு வேறொரு பாத்திரத்தில் ராகி மாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கலக்கி, அதையும் முட்டையுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கரம் மசாலாத் தூள் முதலியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு பானில் எண்ணெய் தடவி ஆம்லெட் ஆக ஊற்றி வேக வைத்து எடுத்தால் மிகவும் சுவையான ராகி ஆம்லெட் தயார்.