தட்டப்பயறு வடகறி செய்வது எப்படி?

தட்டப்பயறு வடகறி செய்வது எப்படி?

0

தேவையான பொருட்கள் :

2 கப் - தட்டப்பயறு

1 கை - பொட்டுக்கடலை

4 பல் - பூண்டு

1 ஸ்பூன் - இஞ்சி பூண்டு பேஸ்ட்

2 - பெரிய வெங்காயம்

1 கப் - தேங்காய்

2 - பச்சை மிளகாய்

2 - தக்காளி

1 ஸ்பூன் - மிளகாய்த்தூள்

2 ஸ்பூன் - சோம்பு

4 - வர மிளகாய்

1 - துண்டு பட்டை

4 - கிராம்பு

3 - ஏலக்காய்

1/2 ஸ்பூன் - மஞ்சள் தூள்

1 ஸ்பூன் - கசகசா

1 கை - புதினா

1 கை - மல்லி இலை

கறிவேப்பிலை

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

தட்டப்பயறு வடகறி செய்வது

தட்டை பயறை 5 மணி நேரம் ஊற வைத்து, அதனை தண்ணீர் இல்லாமல் மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் 2 காய்ந்த மிளகாய், சோம்பு, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு, பச்சை மிளகாய், கசகசா அனைத்தையும் வறுத்து, 

கடைசியாக தேங்காய் சேர்த்து நன்கு வறுத்து, ஆறியவுடன் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் அரைத்த தட்டைப்பயிறு மாவைப் போட்டு வடை யாக அல்லது கிள்ளிப் போட்டு பக்கோடாக்களாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி ஒரு துண்டு பட்டை, கல்பாசி, காய்ந்த மிளகாய், அரை ஸ்பூன் சோம்பு, சேர்த்து வதக்கி கருவேப்பிலை போட்டு அதனுடன் நீளவாக்கில் அரிந்த வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

வதங்கியவுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கொதித்த பின் தட்டைப் பயிறு பக்கோடா துண்டுகளை போட்டு ஐந்து நிமிடம் மூடி வைத்து கொதிக்க வைக்க வேண்டும். 

பிறகு மல்லி இலை தூவி பரிமாறலாம். ஆப்பம் தோசை அனைத்திற்கும் சேர்த்துக் கொள்ளலாம் மிகவும் சுவையாக இருக்கும். இப்பொழுது சுவையான தட்டைப்பயிறு வடகறி தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)