ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி?





ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் செய்வது எப்படி?

0

அப்பளத்தில் செய்யப்படும் இந்த ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

ஸ்டஃப்டு பன்னீர் பப்பட்
தேவையான பொருட்கள் :

மசாலா அப்பளம் – 10,

துருவிய பன்னீர் – 50 கிராம்,

எலுமிச்சைச் சாறு – சிறிதளவு,

கரம் மசாலாத்தூள் – ஒரு சிட்டிகை,

உருளைக்கிழங்கு (பெரியது) – ஒன்று,

பச்சை மிளகாய் விழுது, எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப. 

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி, துருவிக் கொள்ளவும். அத்துடன் உப்பு, துருவிய பன்னீர், பச்சை மிளகாய் விழுது, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைக்கவும்.

ஒவ்வொரு அப்பளத்தையும் தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து சுத்தமான துணியால் ஒற்றியெடுக்கவும். 

உருளைக்கிழங்கு கலவையில் சிறிதளவு எடுத்து அப்பளத்தின் ஒரு பக்கம் வைத்து மெதுவாக உருட்டி தண்ணீரை தொட்டு ஓரங்களை அழுத்தி ஒட்டவும். 

நரை முடி கருமையாக மீசையில் உள்ள இளநரை போக்க இதை பயன்படுத்துங்கள் !

இதே போல் எல்லா அப்பளங்களையும் செய்யவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டிய அப்பளங்களை ஒவ்வொன்றாக அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சாஸ் உடன் சூடாகப் பரிமாறவும். சுவையான ஸ்டஃப்டு பன்னீர் பப்பட் ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)