குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ரப்ரி செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ரப்ரி செய்வது எப்படி?

0

தேவையானவை :

தோல் நீக்கிய கனிந்த மாம்பழ துண்டுகள் - ஒரு கப்

பால் - 2 1/2 கப்

சர்க்கரை - 1/4 கப் 

குங்குமப்பூ - சிறிது

பாதாம் - 4 

பிஸ்தா - 5

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை: 

குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ரப்ரி
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து விட்டு பிறகு இறக்கி அதில் பாதாமை போட்டு இருபது நிமிடம் ஊற வைத்து, 

கண்ணீரில் மிதந்த மைனா நந்தினி - காதல் பரிசு !

பின் அதன் தோலை நீக்கி விட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் பிஸ்தாவையும் துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து வெது வெதுப்பாக சூடேற்றி இறக்கி, அதில் குங்குமப்பூவை சேர்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு மாம்பழ துண்டுகளை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது பால் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் குங்குமப்பூ பாலை அடுப்பில் வைத்து பாலை நன்கு கொதிக்க விட வேண்டும். அடுத்து அதில் சர்க்கரை சேர்த்து கிளறி, சர்க்கரை கரைந்ததும், அதனை இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

குடலில் புழுக்களை வெளியெற்றும் எருக்கம் பூ !

பாலானது குளிர்ந்ததும், அதில் மாம்பழ கூழ் சேர்த்து, ஏலக்காய் பொடி, பாதாம், பிஸ்தா, சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான மாம்பழ ரப்ரி ரெடி!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)