மாலை வேளையில் வாய்க்கு ருசியாகவும் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து சாப்பிட நினைத்தால், அதற்கு பேபி பொட்டேடோ மஞ்சூரியன் சரியான தேர்வாக இருக்கும்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதன் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
பேபி பொட்டேடோ - 14
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
புரதம் நிறைந்த மத்தி மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் !
மஞ்சூரியனுக்கு...
இஞ்சி பூண்டு பேட் - 1 டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1/4 கப் (நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
வினிகர் - 1/2 டீஸ்பூன்
ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
ஸ்பிரிங் ஆனியன் பச்சை பகுதி - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப
சோள மாவு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, மிளகுத் தூள், இஞ்சி பேஸ்ட், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நீரை ஊற்றி, மிகவும் கெட்டியாக இல்லாமல் ஓரளவு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு மொறு மொறுப்பாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதிகாலையில் எழ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், இஞ்சி பூண்டு பேஸ்ட், ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதியை போட்டு நன்கு வதக்கவும்.
பின் வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். அடுத்து அதில் குடைமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும். பின் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு, மிளகுத் தூள் மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
ஐ.ஏ.எஸ் பணியில் மனைவியை அமர வைத்த சூப்பர் கணவர் !
பின் அதன் மேல் ஸ்பிரிங் ஆனியனின் பச்சைப் பகுதியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பேபி பொட்டேடோ மஞ்சூரியன் தயார்.