குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர் செய்வது எப்படி?

0

எந்த தானியத்தை விடவும் ராகியில் தான் அதிக கால்சியமும், பாஸ்பரசும் உண்டு. 

குழந்தைகளுக்கு விரும்பமான கேழ்வரகு மிக்சர்
‘பி’ காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அத்தியாவசிய சத்துகள் நிறைந்த கேழ்வரகு, எளிதில் ஜீரணமாகக் கூடிய ஒரு மிகச்சிறந்த உணவு. 
பூண்டு மீன் குழம்பு செய்முறை !

கேழ்வரகை களியாய், ரொட்டியாய் உண்பது சர்க்கரை நோயாளிகளுக்கு உத்தமம். குழந்தைகளுக்கு மிகவும் விரும்பமான கேழ்வரகு மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு – 200 கிராம்,

மிளகாய்த் தூள் – சிறிதளவு,

பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரித்த அவல் – தலா 50 கிராம்,

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு. 

சூரிய ஒளி மின்சாரம்

செய்முறை:

கேழ்வரகை அரைத்து மாவாக்கிக் கொள்ள வேண்டும். இந்த மாவில் உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, கெட்டிப் பதத்தில் பிசைய வேண்டும்.

மாவை ஓமப்பொடி அச்சில் போட்டு, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். இதனுடன், பொட்டுக்கடலை, வேர்க்கடலை பொரித்த அவல் சேர்த்தால், சுவையான கேழ்வரகு மிக்சர் ரெடி!

பலன்கள்:

பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?

கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், கார்போ ஹைட்ரேட் போன்ற சத்துக்கள் உள்ளன. உடலுக்கு வலிமையைத் தரும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)