குழந்தைகளுக்கு தேங்காயில் சிக்கன் கறி குழம்பு செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு தேங்காயில் சிக்கன் கறி குழம்பு செய்வது எப்படி?

0

கார்போ ஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின் C, B காம்ப்ளக்ஸ், நார்ச்சத்து, சர்க்கரை, கொழுப்பு, லாரிக் அமிலம், காப்ரிக் அமிலங்கள், மாங்கனீசு, இரும்பு, தாமிரம், மற்றும் மெக்னீசியம் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இந்த தேங்காயில் நிறைந்துள்ளன. 

குழந்தைகளுக்கு தேங்காயில் சிக்கன் கறி குழம்பு
தேங்காய் சாப்பிடுவது நல்லதா? கெடுதியா? என்ற சந்தேகம் இருந்து கொண்டே வருகிறது. இந்த தேங்காயில் கொழுப்பு ஹைப்பர் லிப்பிடிமியா நிரம்பி யிருப்பதால், தேங்காய் சாப்பிட்டால் மாரடைப்பு வந்துவிடும் என்பார்கள். 

ஆனால், தேங்காயிலுள்ள சேச்சுரட்டேடு கொழுப்பு அமிலங்கள் ஆத்ரோஜெனிக் வடிவமானவை. எனவே, கொழுப்புகள் அதிகமாக உடலில் தங்குவதில்லை. கொலஸ்ட்ரால் தொந்தரவும் ஏற்படாது. 
அது மட்டுமல்ல, தேங்காயிலுள்ள கொழுப்புகள், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க செய்பவை என்பதால், உடல் எடையை குறைக்க தேங்காய் சிறந்த தேர்வு ஆகும். 

இதிலுள்ள அதிக நார்ச்சத்துக்கள் ரத்த சர்க்கரை அதிகரிப்பதை தடுக்கிறது. நோய் தொற்றுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டு வரும் போது, ரத்த சர்க்கரை அளவு பராமரிக்கப்படும். 

ஆனால், நீரிழிவு நோயாளிகள், பச்சை தேங்காயை சாப்பிடுவதற்கு பதில், சட்னியாகவோ, பொரியல்களை துருவிப்போட்டு சாப்பிடலாம்.

தேங்காயில் செய்யப்படும் சிக்கன் கறி ஒரு செளத் இந்தியன் ஸ்டைல் ரெசிபி ஆகும்.இதை எப்படி சமைக்கலாம் என்பதை பார்க்கலாம்..

தேவையான பொருள்கள்: 

சிக்கன்-1 கிலோ 

க்ரீம்-2 கப் 

மஞ்சள் தூள்-1 ஸ்பூன் 

உப்பு-தேவையான அளவு

தேங்காய் பால்-2 கப்  

இஞ்சி பூண்டு விழுது-2 ஸ்பூன் 

மிளகாய் தூள்-1 ஸ்பூன் 

கரம் மசாலா-1 ஸ்பூன் 

வெண்ணெய்-100 கிராம் 

வெங்காயம்-2 

செய்முறை: 

ஒரு கிண்ணத்தில் சிக்கன், இஞ்சி, பூண்டு விழுது, உப்பு, கரம் மசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 

ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி அதில் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். இதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு பொறித்து கொள்ள வேண்டும். 

கர்ப்பிணிகளுக்கு வரக்கூடிய பைல்ஸ் பிரச்னை - தீர்வும் தடுக்கும் வழிகளும் !

கடைசியில் க்ரீம் மற்றும் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு அடுப்பை அனைத்து விட வேண்டும். சூடான, காரசாரமான தேங்காய் சிக்கன் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)