செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி?





செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது எப்படி?

0

நீங்கள் மதிய வேளையில் மிகவும் எளிமையான பொரியல் செய்ய விரும்பினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியலை செய்யலாம். 

செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் செய்வது
இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பீன்ஸில் சத்துக்கள் அதிகம் உள்ளது. 

ஒருவர் அடிக்கடி உணவில் பீன்ஸ் சேர்த்து வந்தால், பல்வேறு நன்மைகளைப் பெறலாம். உங்கள் வீட்டில் உள்ளோர் பீன்ஸ் சாப்பிட மறுத்தால், அவர்களுக்கு அதை முட்டையுடன் சேர்த்து பொரியல் செய்து கொடுங்கள்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 6

கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 2 டீஸ்பூன்

சீரக விதைகள் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

பீன்ஸ் - 1 கப் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு அதில் பீன்ஸ் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வேகும் வரை வதக்கவும். அதற்குள் மிளு மற்றும் சீரகத்தை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

பிறகு அரைத்த பொடியை சேர்த்து நன்கு ஒரு நிமிடம் வதக்கவும். அடுத்து, அதில் முட்டைகளை ஒவ்வொன்றாக உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி குறைவான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.

முட்டை நன்கு வெந்ததும், அதன் மேல் கொத்த மல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் பீன்ஸ் முட்டை பொரியல் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)