தோசை மொறு மொறுன்னு ஹோட்டல் தோசை போல வேண்டுமா?





தோசை மொறு மொறுன்னு ஹோட்டல் தோசை போல வேண்டுமா?

0

என்ன தான் நம்ம வீட்டுல தோசை சுட்டு கொடுத்தாலும், ஹோட்டல் தோசைக்கு இணை எதுவும் இருக்காது.

தோசை மொறு மொறுன்னு ஹோட்டல் தோசை போல
இருந்தாலும் ஹோட்டல் தோசையை நம்ம வீட்டுல தினமும் நமக்கு சுட்டு கொடுத்தால் எப்படி இருக்கும். இனி கவலையை விடுங்க, 

நீங்கள் கேள்விப்படாத விசித்திரம் நிறைந்த கொடூரமான மரணம் ! 

இதை பண்ணுங்க. ஹோட்டல் தோசைக்கு இனி ஹோட்டலுக்கு போக வேண்டாம். இதை மட்டும் try பண்ணி தினமும் ஹோட்டல் தோசை  நம் வீட்டிலேயே சாப்பிடுங்கள். 

சரி வாங்க சுவையான ஹோட்டல் தோசை போல மொறு மொறுன்னு ஹோட்டலில் தருவது போல் மெல்லிய தோசை வருமா? வரும். அதை எப்படி செய்வது என்பதை காண்போம்

தேவையான பொருட்கள்:

தோசை மாவு – ஒரு கப்

அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – இரண்டு ஸ்பூன்

செய்முறை:

ஒரு பவுலை எடுத்து கொள்ளவும் அவற்றில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து கொள்ளவும்.

அரிசி மாவை கெட்டியாக கரைத்து கொள்ள வேண்டாம், தாராளமாக தண்ணீர் ஊற்றியே கரைத்து கொள்ளலாம். இந்த கரைத்த அரிசி மாவு கலவையை தோசை மாவில் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

காலில் உள்ள நகங்களை சுத்தம் செய்ய !

(அரிசி மாவு எதற்காக சேர்க்கிறோம் என்றால் நல்ல மொறு மொறுப்பு தன்மையை தருவதற்காக இந்த அரிசி மாவை பயன்படுத்துகின்றோம்). பின்பு இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

அவ்வளவு தான். இப்போது இந்த மாவில் மட்டும் ஹோட்டலில் சுடுவது போல் மெல்லியதாக தோசை சுட்டு பாருங்கள். அருமையாக வெந்து வரும்.

அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவி கலந்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டி எடுத்து தோசை ஊற்றி அதன் மேல் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 

மூடியை கொண்டு மூடி இரண்டு நிமிடம் கழித்து தோசையை எடுத்தால் போதும், ஹோட்டலில் கிடைக்கும் மொறு மொறுப்பான தோசை ரெடி…

குறிப்பு :

தோசைமாவு வழக்கமாக கரைப்பதை விட, கொஞ்சம் தண்ணீராக கரைத்து கொண்டால் தோசை உற்றுவதற்கு மிகவும் ஈசியாக இருக்கும். 

பூனை தன் கழிவுகளை புதைக்கும் பழக்கம் எப்படி உருவானது?

அது மட்டும் இல்லாமல் தோசை நன்றாக மொறு மொறுவென்று இருக்கும். ஒரு பக்கம் மட்டுமே வேக விட வேண்டும். தப்பி தவறியும் திருப்பி போடக்கூடாது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)