பாரம்பரியமாக நம் முன்னோர்கள் குளியலுக்கு பயன்படுத்திய மூலிகை பொருட்களின் கலவையே நலங்கு மாவு ஆகும். 

நலங்கு மாவு தயாரிக்கும் முறை
இன்று குழந்தைகளுக்கென பிரத்யேகமாக பல்வேறு சோப்புகள் வந்தாலும் நாம் வீட்டிலேயே தயாரிக்கும் குளியல் பொடிக்கு ஈடாகாது.

நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும். 

நரம்பு தளர்ச்சி குணமடைய வைட்டமின் பி12 !

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி அரைக்க வேண்டும்.

தேவையான பொருட்கள் :

கஸ்தூரி மஞ்சள்- 250 கிராம்

மஞ்சள் கிழங்கு -200 கிராம்

பூலாங்கிழங்கு- 100 கிராம்

ரோஜா பூ-100 கிராம்

ஆவாரம் பூ-100 கிராம்

செண்பக மொட்டு-50 கிராம்

கார்போக அரிசி- 100 கிராம்

கோரை கிழங்கு- 50 கிராம்

வெட்டிவேர்- 25 கிராம்

மலை நன்னாரி-100 கிராம்

பூஞ்சாந்து பட்டை- 50 கிராம்

திருமஞ்சன பட்டை- 100 கிராம்

மரிக்கொழுந்து- 50 கிராம்

மருவு- 50 கிராம்

பச்சிலை- 50 கிராம்

வசம்பு- 25 கிராம்

கல்பாசி- 50 கிராம்

அதிமதுரம்-50 கிராம்

லவங்க பத்திரி இலை -25 கிராம்

செய்முறை :

மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை வாங்கி 2-3 மணி நேரங்களுக்கு காய வைக்க வேண்டும்.

மெஷினில் கொடுத்து பொருட்களை அரைக்க வேண்டும். குளியல் பொடியை அரைக்கும் மெஷினில் அரைக்க வேண்டும்.

கெண்டகி ஃபிரைடு சிக்கன் (KFC) செய்வது

ஏனென்றால் மசலா பொருட்களை அரைக்கும் மெஷினில் நலங்கு மாவினை அரைக்கும் பொழுது உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

அரைத்த  நலங்கு மாவினை காற்று புகாத டப்பாவில் வைத்து பயன்படுத்தலாம்.